ஆத்தாடி.. இவருக்கு வந்த வாழ்வைப் பாருங்க!

By Rajeswari

சென்னை: வனமகன் நடிகையை பற்றி தினமும் புதிய புதிய கிசுகிசுக்கள் சுவாரசியமாக வருகிறதாம். பலருக்கும் அடி வயிறு எரிகிறதாம் இவரது வேகமான வளர்ச்சியைப் பார்த்து.

குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டதால் பலருக்கும் இவர் மீது பொறாமையாம். ஆனால் இந்த வனமகன் நடிகைக்கும் கூட ரொம்பத்தான் என்றும் புலம்புகிறது கோலிவுட்.

New Tamil heroine giving hype to her salary

சமீபத்தில் அவர் தனது பிறந்தநாளுக்கு பார்ட்டி கொடுத்தாலும் கொடுத்தார்.. கோலிவுட்டே ஒரே பேச்சாக பேசிக் கொண்டிருக்கிறது. முழுக்க முழுக்க மிதந்தார்களாம் அந்த பார்ட்டிக்குப் போனவர்கள். அப்படி குளிப்பாட்டி எடுத்து விட்டாராம் நடிகை.

இந்த பிறந்த நாள் விழாவுக்குப் போய் விட்டு வீடு திரும்பியபோதுதான் காரை தாறுமாறாக ஓட்டி பிரபல நடிகரின் மகன் விபத்துக்குள்ளானாராம். பார்ட்டியின்போது ஒரு நடன நடிகருடன், வனமகன் நடிகை பின்னிப் பிணைந்து காணப்பட்டாராம். ஆஹா.. இது அதுல்ல என்று தற்போது வதந்திகளும் வால் பிடித்து கிளம்பி விட்டன.

அட அத விடுங்க பாஸ்.. இப்ப நடிகை தனது சம்பளத்தை கிடுகிடுவென ஏற்றி விட்டாராம். என்னம்மா இது என்று கேட்போரிடம், எனக்குன்னு ஒரு இது இருக்குல்ல. அதை மெயின்டெய்ன் பண்ணத்தான் என்று கிறக்கமாக கூறுகிறாராம். 2 கோடி வரை போய் விட்டதாம் தொகை. இயக்குநர்களுக்கு இது அதிர்ச்சியான தகவல்தான் என்றாலும் கூட இப்போது கிராக்கி இவருக்குத்தான் அதிகம் என்பதால் இறங்கித்தான் போவார்கள் என்கிறார்கள்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பானாம்.. ஆத்தாடி அம்மாடி என்றாலும் காத்தாடி சும்மா இருக்குமா.. சுத்தத்தானே செய்யும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X