»   »  "கிசு கிசு" கார்னர்

"கிசு கிசு" கார்னர்

Subscribe to Oneindia Tamil

பாய்ஸ் படத்தில் ஆபாசம் அதிகம் இருப்பதாக வந்த புகாரையடுத்து, தமிழ்ப் படங்களை இனிமேல் சென்னையில்மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும் மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த உத்தரவினால் இளமை துள்ளும் பல படங்களை தயாரித்து வரும், இயக்கி வரும் தயாரிப்பாளர்களும்,இயக்குனர்களும் பெரும் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

இப்படி தடை போட்டால், அப்படி, இப்படி காட்சிகளை எப்படி எடுப்பது என்று அவர்கள் கடுப்படைந்துள்ளனர்.

இந்த புதிய உத்தரவுக்கு முதல் பலியாகப் போவது சூர்யா நடித்து- இயக்கி வரும் நியூ படம் என்று கோலிவுட்டில்பேசப்படுகிறது.

நியூ படத்தில் பகலில் குழந்தையாகவும், இரவில் வாலிபனாகவும் மன மாறுதல் கொள்ளும் (?)கேரக்டல் சூர்யா நடித்து வருகிறார்.

படத்தில் சூரியாவுக்கு தெரியாத பல காதல் பாடங்களை சிம்ரன் சொல்லிக் கொடுப்பது போல காட்சிகள் உள்ளன.

மேலும் கிரண் மூலமும் ஏகப்பட்டதை இந்தப் படத்தில் சூர்யா கற்றுக் கொள்வதாக காட்சிகள் உள்ளனவாம்.கிட்டத்தட்ட சாப்ட் போர்ன் லெவலில் தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.பெட்ரூம் காட்சிகளில் கவர்ச்சி கரைபுரண்டு ஓடுகிறராம்.

இந்தக் காட்சிகளை சென்னை சென்சார் போர்டு கத்தி கண்டால், விடாது என்று கோலிவுட்டில் முனுமுனுக்கிறார்கள்.

Please Wait while comments are loading...