நடிகையின் திடீர் முடிவுக்கு காரணம் தமாஸ் நடிகரா?.. வயசானவங்களுடன் நடிச்சு போரடிச்சிடுச்சாம்?

By Staff

சென்னை: நம்பர் நடிகை மற்றும் பேபி நடிகை என பல சீனியர் நடிகைகளுடன் இணைந்து நடித்து வந்த அந்த தமாஸ் நடிகர் இந்த சீனியர் நடிகையை மட்டும் டீலில் விட்டுவிட்டாராம். அவருடன் எப்படி நடிப்பது என்கிற டவுட்டு காரணமாகவே நடிகையை எந்த படத்திலும் புக் செய்யாத நிலையில், நடிகை தரப்பில் இருந்து நடிகரின் புதிய படத்துக்கு வந்த அழைப்பையும் அவர் உதாசினப்படுத்திய நிலையில் தான் நடிகை திடீரென சினிமாவை விட்டே விலகிவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சில கிசுகிசுக்கள் லேட்டஸ்ட்டாக கிளம்பியுள்ளன.

மாஸ் நடிகருக்குப் பிறகு கோலிவுட்டில் யார் டாப்போ அவருடன் இணைந்து நடித்தால் மட்டுமே நல்லா இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த நடிகைக்கு க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லையாம் அந்த தமாஸ் நடிகர்.

gossip kollywood actress gossip

மற்ற சீனியர் நடிகைகளுடன் இணைந்து நடித்த நடிகர் தன்னை மட்டும் அவாய்டு செய்வதற்கு பின்னணியில் ஏதாவது காரணம் உள்ளதா என நினைத்த நடிகை அடுத்த ஜெனரேஷன் நடிகர்கள் தன்னை ஆன்ட்டியாகத்தான் பார்க்கின்றனர் என்றும் இனிமேல், வயதான ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்தால் நமக்கும் வயதான ஃபீல் தான் வரும் என்பதால் அப்படியொரு முடிவுக்கே நடிகை வந்துவிட்டதாக கூறுகின்றனர்.

இளம் நடிகர்களுடன் நம்பர் நடிகை: திருமணமான பின்னரும் இளம் நடிகர்களுடன் எந்தவொரு தயக்கமும் இன்றி நம்பர் நடிகை நடித்து வரும் நிலையில், தனக்கு மட்டும் ஏன் தலை நரைத்த வயதான ஹீரோக்களுடன் மட்டுமே நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்து வருகிறது என்கிற டென்ஷன் நடிகையை சமீப காலமாக ரொம்பவே பாதித்து வருவதாக கூறுகின்றனர்.

அவாய்டு பண்ண நடிகர்: மேலும், தமாஸ் நடிகர் அடுத்து சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் எப்படியாவது அவருக்கு ஜோடியாக நடித்துவிட்டால் இன்னும் சில ஆண்டுகள் சினிமாவில் நீடிக்கலாம் என நினைத்த நடிகைக்கு அவர் எந்தவொரு பதிலும் சொல்லாமல் அவாய்டு செய்தது சுத்தமாக பிடிக்கவில்லை என்கின்றனர். அனைத்து நடிகர்களும் 40 பிளஸ், 50 பிளஸ் கடந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில், ஜாலியான காதல் படங்கள் மற்றும் இளம் நடிகர்களுடன் இணைந்து எனர்ஜெட்டிக்காக நடிப்பது என எந்தவொரு ரோலும் நடிகைக்கு கிடைக்காமல் நடிகருடன் பத்து அடி தள்ளி நிற்கும் கதாபாத்திரம் கிடைத்து வருவதால் தான் நடிகை அப்செட் ஆகிவிட்டாராம்.

இப்படியொரு காரணமா?: நடிகை சினிமாவை விட்டே விலகி விடலாமா என்கிற சிந்தனைக்கு வர முக்கிய காரணமே பழையபடி யங் நடிகர்களுடன் ஜோடி போட்டு ரொமான்ஸ் செய்ய முடியாத சூழல் உருவானதை நடிகை புரிந்துக் கொண்டது தான் என்கின்றனர். நடிகைக்கு இணையான நடிகர்களும் சினிமாவை விட்டு வேறு சில விஷயங்களில் பிசியாகும் நிலையில், சீனியர் நடிகையாக மாற வேண்டாம் என்றும் அடுத்ததாக புதுசா ஏதாவது செய்ய வேண்டும் என்கிற முனைப்பை நடிகை காட்டி வருவதாக கூறுகின்றனர். ஆனால், கைவசம் நடிகைக்கு இருக்கும் படங்களை எல்லாம் முடித்துவிட்டு நிற்கும் போது புதுசா ஏதாவது நடிகையை கவரும் வகையில் கதைகள் வந்தால் தொடர்ந்து நடிப்பார் என்றும் சினிமாவை விட்டு அவ்வளவு சீக்கிரத்தில் நடிகை விலக வாய்ப்பே இல்லை என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X