திருட்டுக் கதையில மாட்ட வச்சிட்டீங்களே!- இயக்குநர் மீது நடிகரின் வருத்தம்
செம சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அந்த நைஃப் படத்தின் இயக்குநர் மீது ஹீரோவுக்கு செம வருத்தமாம்.
படம் ஏற்கெனவே ஈழத் தமிழ் ஆதரவாளர்களால் ரவுண்டு கட்டி தாக்கப்பட்டு வரும் நிலையில், படத்தின் கதை பக்காவாக காப்பியடிக்கப்பட்ட உண்மை நடிகருக்கு தெரிய வர ஏகத்துக்கும் அப்செட் ஆகிவிட்டாராம்.
எதிர்ப்புகளைக் கூட சமாளித்துவிடலாம். ஆனால் திருட்டுக் கதை விவகாரம் அப்படியல்ல. நீதிமன்றத்தில் டவுசரை அவிழ்த்துவிடுவார்கள்... அல்லது சமரசம் பேசி நஷ்ட ஈடு தரவேண்டும். இது தேவையில்லாத தலைவலி, அவமானம் என்று குமுறுகிறாராம் ஹீரோ!
இதனால் இயக்குநரிடம் முகம் கொடுத்துப் பேசவே மறுக்கிறாராம்.
இந்த திருட்டுக் கதை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கதாசிரியரிடம் சீக்கிரம் சமாதானமாகாவிட்டால், படம் வெளிவராமல் போகும் அபாயமிருக்கிறது. ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் வேலையை நீதிமன்றமே செய்துவிடும் என்கிறார்கள், திருட்டுக்கதை விவரம் அறிந்தவர்கள்.


Click it and Unblock the Notifications











