நிலாவின் நிஜக் காதல்! எஸ்.ஜே.சூர்யா சும்மாதானாம், நிலாவின் நிஜக் காதலன் வேறு யாரோவாம்! இதை நிலாவே போட்டு உடைத்துள்ளார். அன்பே ஆருயிரே என்று வந்த நிலா, ஜாம்பவானில் முறுக்கிக் கொண்டு ஹைதராபாத்தில் அடைக்கலம் புகுந்தார். பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் ஜாம்பவான் பிரச்சினை ஒருபக்கம் சூடாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் ஜாலியாக இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நிலா. இந் நிலையில் தனது மகன் பிரஷாந்தின் படம் நிலாவால் சிக்கலில் மாட்டியதால் தவித்துப் போன தந்தை தியாகராஜன், எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசினாராம். நிலாவின் பாதுகாப்புக்கு நானும் பிரசாந்தும் உறுதி தருகிறோம் என்று கெஞ்சிக் கூத்தாடியதையடுத்து நிலாவை மீண்டும் சூட்டிங்கு வர சம்மதிக்க வைத்துள்ளார் சூர்யா. இதையடுத்து குற்றாலம் எல்லாம் வேண்டாம், சென்னையிலேயே சூட்டிங் நடத்துங்கள் என்று சொல்லி ஜாம்பவானில் வந்து நடித்துவிட்டுப் போக ஆரம்பித்துள்ளா நிலா. இடையிடையே ஹைதராபாத்துக்கும் போய் அங்கு படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளளும் நிலா, தான் சந்தோஷமாக இருப்பதைக் காட்ட கூட நடிப்பவர்களையும் சந்திக்க வரும் நிருபர்களையும் உட்கார வைத்து பல கதைகள் பேசி கலகலக்க வைக்கிறாராம். அதில் ஒரு கதையாக தனது காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் நிலா. எஸ்.ஜே.சூர்யாவோடு தானே... என்று வழக்கமான கதையை எதிர்பார்த்தவர்களுக்கு.. அவர் சொன்ன சுய காதல் கதை ரொம்ப புதுசா இருந்ததாம். சூர்யாவை நான் கண்ணாலம் கட்டிக்குவேன் என்று கோலிவுட்டில் கிளம்பிக் கொண்டிருக்கும் செய்திகள் எல்லாம் உடான்ஸ். எனது ரேஞ்சே வேற, எனது காதலரும் வேற என்று கூறி தெலுங்குப் பத்திரிக்கையாளர்களுக்கு செம தீனி போட்டிருக்கிறார் நிலா. நானும், என்னவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறோம். ரொம்ப டீப்பான காதல் இது. இப்படிப்பட்ட காதல் சட்டுப் புட்டென்று திருமணத்தில் முடிந்து விட்டால் பின்னர் காதலின் சுவாரஸ்யத்தை அனுபவிக்க முடியாது அல்லவா? அதனால்தான் இதுவரை கல்யாணத்தைப் பற்றிய சிந்தனையே எங்களுக்குள் வரவில்லை. ஒருவேளை நாளைக்கே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டால், உடனே செய்து கொண்டு செட்டிலாகி விடுவேன் (அப்ப, அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி?) ஆனால், (அதிர்ஷ்டவசமாக) அந்த எண்ணம் இப்போதைக்கு வரவில்லை. வந்த பிறகு பார்ப்போம். தெலுங்கில் இப்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். ஜாம்பவான் பிரச்சினைக்கு நான் காரணம் அல்ல. யார் தவறு செய்தார்களோ அவர்கள்தான் திருத்திக் கொள்ள வேண்டும் என்கிறாராம் நிலா. அப்ப சூர்யா ஆபிசிலேயே அவருடன் தங்கியிருப்பது? ஜாம்பவான் படத்துக்காக நிலாவுக்கு தரப்பட்ட சம்பளம் ரூ. 19 லட்சம். தெலுங்கில் இதைப் போல இரு மடங்காம். மேலும் தனது வயிற்றுப் பகுதியை அழகாக்க ரூ. 5 லட்சத்தில் ஒரு ரகசிய ஆபரேஷனை ஆந்திராவில் வைத்து செய்துள்ளாராம் நிலா. இந்த பில்லைக் கட்டியது ஒரு தெலுங்குத் தயாரிப்பாளராம். இப்போ தெரியுதா ஜாம்பவானை அம்மோவென விட்டுவிட்டு தெலுங்குக்கு நிலா பாய்ந்தது ஏன் என்று?

By Staff

எஸ்.ஜே.சூர்யா சும்மாதானாம், நிலாவின் நிஜக் காதலன் வேறு யாரோவாம்! இதை நிலாவே போட்டு உடைத்துள்ளார்.

அன்பே ஆருயிரே என்று வந்த நிலா, ஜாம்பவானில் முறுக்கிக் கொண்டு ஹைதராபாத்தில் அடைக்கலம் புகுந்தார்.

பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் ஜாம்பவான் பிரச்சினை ஒருபக்கம் சூடாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் ஜாலியாக இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நிலா.

இந் நிலையில் தனது மகன் பிரஷாந்தின் படம் நிலாவால் சிக்கலில் மாட்டியதால் தவித்துப் போன தந்தை தியாகராஜன், எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசினாராம்.


நிலாவின் பாதுகாப்புக்கு நானும் பிரசாந்தும் உறுதி தருகிறோம் என்று கெஞ்சிக் கூத்தாடியதையடுத்து நிலாவை மீண்டும் சூட்டிங்கு வர சம்மதிக்க வைத்துள்ளார் சூர்யா.

இதையடுத்து குற்றாலம் எல்லாம் வேண்டாம், சென்னையிலேயே சூட்டிங் நடத்துங்கள் என்று சொல்லி ஜாம்பவானில் வந்து நடித்துவிட்டுப் போக ஆரம்பித்துள்ளா நிலா.

இடையிடையே ஹைதராபாத்துக்கும் போய் அங்கு படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ளளும் நிலா, தான் சந்தோஷமாக இருப்பதைக் காட்ட கூட நடிப்பவர்களையும் சந்திக்க வரும் நிருபர்களையும் உட்கார வைத்து பல கதைகள் பேசி கலகலக்க வைக்கிறாராம்.

அதில் ஒரு கதையாக தனது காதல் கதையைச் சொல்லியிருக்கிறார் நிலா. எஸ்.ஜே.சூர்யாவோடு தானே... என்று வழக்கமான கதையை எதிர்பார்த்தவர்களுக்கு.. அவர் சொன்ன சுய காதல் கதை ரொம்ப புதுசா இருந்ததாம்.


சூர்யாவை நான் கண்ணாலம் கட்டிக்குவேன் என்று கோலிவுட்டில் கிளம்பிக் கொண்டிருக்கும் செய்திகள் எல்லாம் உடான்ஸ். எனது ரேஞ்சே வேற, எனது காதலரும் வேற என்று கூறி தெலுங்குப் பத்திரிக்கையாளர்களுக்கு செம தீனி போட்டிருக்கிறார் நிலா.

நானும், என்னவரும் கடந்த நான்கு வருடங்களாக காதலித்துக் கொண்டிருக்கிறோம். ரொம்ப டீப்பான காதல் இது. இப்படிப்பட்ட காதல் சட்டுப் புட்டென்று திருமணத்தில் முடிந்து விட்டால் பின்னர் காதலின் சுவாரஸ்யத்தை அனுபவிக்க முடியாது அல்லவா?

அதனால்தான் இதுவரை கல்யாணத்தைப் பற்றிய சிந்தனையே எங்களுக்குள் வரவில்லை. ஒருவேளை நாளைக்கே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்து விட்டால், உடனே செய்து கொண்டு செட்டிலாகி விடுவேன் (அப்ப, அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர் கதி?)


ஆனால், (அதிர்ஷ்டவசமாக) அந்த எண்ணம் இப்போதைக்கு வரவில்லை. வந்த பிறகு பார்ப்போம். தெலுங்கில் இப்போது தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். ஜாம்பவான் பிரச்சினைக்கு நான் காரணம் அல்ல. யார் தவறு செய்தார்களோ அவர்கள்தான் திருத்திக் கொள்ள வேண்டும் என்கிறாராம் நிலா.

அப்ப சூர்யா ஆபிசிலேயே அவருடன் தங்கியிருப்பது?

ஜாம்பவான் படத்துக்காக நிலாவுக்கு தரப்பட்ட சம்பளம் ரூ. 19 லட்சம். தெலுங்கில் இதைப் போல இரு மடங்காம். மேலும் தனது வயிற்றுப் பகுதியை அழகாக்க ரூ. 5 லட்சத்தில் ஒரு ரகசிய ஆபரேஷனை ஆந்திராவில் வைத்து செய்துள்ளாராம் நிலா. இந்த பில்லைக் கட்டியது ஒரு தெலுங்குத் தயாரிப்பாளராம்.

இப்போ தெரியுதா ஜாம்பவானை அம்மோவென விட்டுவிட்டு தெலுங்குக்கு நிலா பாய்ந்தது ஏன் என்று?

Read more about: nila in love not with sj surya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X