நடிக்க போன தொலைச்சிடுவேன் தொலைச்சு: நடிகையை மிரட்டும் தாய்க்குலம்
Recommended Video

15 கோடி நஷ்டம்... வம்பு மீது புகார், நடிகையை மிரட்டும் தாய்க்குலம்- வீடியோ
சென்னை: மங்களரமான நடிகையை முதலில் படித்து முடி அதன் பிறகு நடிக்கப் போகலாம் என்று தாய்க்குலம் கூறிவிட்டாராம்.
வந்த வேகத்தில் மட மடவென வளர்ச்சி அடைந்தவர் அந்த மங்களகரமான நடிகை. சிறு வயது என்றாலும் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார்.
நடிகை பார்க்க பெரிய பெண் போன்று இருப்பதால் சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டபோது கூட வயது வித்தியாசம் தெரியவில்லை. நடிகை தற்போது கல்லூரி படிப்பில் கவனம் செலுத்துகிறார். அவரது உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்புகளும் இல்லாமல் போய்விட்டது.
நடிகை தற்போது எடையை குறைத்துவிட்டு நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். இது குறித்து அறிந்த தாய்க்குலம் முதலில் படி அப்புறமா நடிக்கலாம் என்று கறாராக கூறிவிட்டாராம்.
அம்மாவின் கன்டிஷனால் நடிகை கவலையில் உள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications