நம்ம மட்டும் ஏன் டிரெண்டிங் ஆகல.. பயங்கர கடுப்பில் பாஸ் நடிகர்.. அந்த பிரச்சனை தான் காரணமா?

சென்னை: இளம் நடிகர்களின் பட அப்டேட்கள் கூட டிரெண்டாகி வரும் நிலையில், நம்ம படம் குறித்த அந்த அப்டேட் மட்டும் ஏன் டிரெண்டாகவே இல்லை என பாஸ் நடிகர் பயங்கர கடுப்பில் உள்ளாராம்.

உச்ச நடிகரின் ஒரு போட்டோ வந்தா கூட இணையத்தை தெறிக்கவிடுகிறது. ஆனால், நாம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டால் கூட அது ஹிட் ஆக மாட்டேன் என்கிறதே அதற்கு என்ன காரணம் என விசாரித்து வருகிறாராம்.

ஏற்கனவே இயக்குநர் கதை திருட்டில் சிக்கி இருப்பது தான் இதற்கான காரணம் என வேர்ல்ட் நடிகர் காதுக்கு சேதி எட்டியுள்ளது.

கதை திருட்டு

கதை திருட்டு

இந்தியளவுக்கு அந்த இளம் இயக்குநரை திரும்பி பார்க்க வைத்த படத்தின் கதையே காப்பி என எழுந்த சர்ச்சையால் அந்த இயக்குநர் அடுத்ததாக இயக்கவுள்ள பாஸ் நடிகரின் படத்திற்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கதை திருட்டு

கதை திருட்டு

இந்தியளவுக்கு அந்த இளம் இயக்குநரை திரும்பி பார்க்க வைத்த படத்தின் கதையே காப்பி என எழுந்த சர்ச்சையால் அந்த இயக்குநர் அடுத்ததாக இயக்கவுள்ள பாஸ் நடிகரின் படத்திற்கு ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போட்டா போட்டி

போட்டா போட்டி

பாஸ் நடிகர் இன்னொரு ரீமேக் படத்தின் மீது ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், போட்டா போட்டிப் போட்டு தனது படத்தை முதலில் எடுத்தே ஆக வேண்டும் என கடகடவென வேலைகளில் இறங்கி உள்ள அந்த இயக்குநர் சமீபத்தில் படம் தொடர்பான சில அப்டேட்களை வெளியிட்டு இருந்தார்.

எல்லாமே காப்பி

எல்லாமே காப்பி

படத்தின் டைட்டில் தான் காப்பி என்று பார்த்தால், சமீபத்தில் வெளியான அந்த அப்டேட் கூட காப்பியாகவே உள்ளதால் ரசிகர்களை புதுமையாக ஈர்க்கும் அளவுக்கு எந்தவொரு விஷயமும் இல்லை. ஆனால், பல நல்ல நடிகர்களை சேர்த்துக் கொண்டு வெறும் வெற்று பில்டப் கொடுத்து வருகிறார் அந்த இயக்குநர் என சினிமா வட்டாரத்தில் ஒரே பேச்சாக அடிப்பட்டு வருகிறது.

டிரெண்டாகல

டிரெண்டாகல

முன்னதாக வெளியான மாஸ் நடிகரின் அப்டேட் மற்றும் சமீபத்தில் வந்த டாப் நடிகரின் அப்டேட் மற்றும் வெப் படைப்பு என எல்லாமே வேற லெவலில் போட்ட மாத்திரத்திலேயே சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், பெரிய படைப்பாக எதிர்பார்த்த அந்த பாஸ் நடிகரின் படம் தொடர்பான அப்டேட் டிரெண்டாகாதது அவரை மிகவும் அப்செட் ஆக்கி உள்ளதாம்.

நம்ப வைத்து

நம்ப வைத்து

கூட இருக்கிற அனைவரும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி வரும் நிலையில், தொடர்ந்து ஒவ்வொரு படமும் முழுமை பெறாமல் அப்படியே டிராப் ஆகி வரும் நிலையும் அந்த பாஸ் நடிகருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால், இந்த படமாவது முழுமை பெற்று வெளியாகுமா இல்லை இந்த இயக்குநருடனும் முரண் ஏற்பட்டு முடிந்து விடுமோ என்றும் கோடம்பாக்கத்தில் ஒரே பேச்சாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X