அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா?
ஒல்லி நடிகருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்ததோடு அவரது கேரியரிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் விக்டரி இயக்குனர். அவரையே சுமார் ஆறு ஆண்டுகளாக உட்கார வைத்தார் ஒல்லி.
கடுப்பான அவர் இடையில் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை எடுத்து அதற்காக தேசிய விருதும் பெற்று விட்டார்.
ஒரு வழியாக ஒல்லி கால்ஷீட் கொடுக்க சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது நார்த் மெட்ராஸ் படம். முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில் அப்படியே கிடப்பில் போட்டு விட்டு வேறு படங்களுக்கு போய் விட்டார் ஒல்லி. படம் திரும்ப தொடங்குவது சந்தேகம்தானாம்.
இதை உணர்ந்த என்னாச்சு நடிகர் படத்தில் இருந்து விலகி விட்டார். விசாரித்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பழைய ஒல்லியாக இல்லை நடிகர். இயக்கத்தில் அதிகம் தலையிட்டிருக்கிறார். இதனால் இயக்குநருக்கும் நடிகருக்கும் மோதல் ஆகி தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருக்கிறது.
கடுப்பான இயக்குநர் அந்தப் படத்தை மறந்து விட்டு ஒல்லியின் சமீபத்திய எதிரியான இசை ஹீரோவுக்கு கதை தயார் செய்து கால்ஷீட் வாங்கி விட்டாராம்.


Click it and Unblock the Notifications











