»   »  7 கோடி டூ ஒரு கோடி... சம்பளத்தில் சறுக்கல் கண்ட மூன்று ஹீரோக்கள்!

7 கோடி டூ ஒரு கோடி... சம்பளத்தில் சறுக்கல் கண்ட மூன்று ஹீரோக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா ஏணியில் ஏற்றம் மட்டும்தான் உண்டு இறக்கமே இல்லை என்று நினைத்து ஓரிரு வெற்றிகளால் ஆடுபவர்களை அடுத்த சில படங்களிலேயே கீழே இறக்கி விட்டுவிடும் சினிமா. அப்படி 7 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கிய மூன்று ஹீரோக்கள் அடுத்தடுத்த தோல்விகளால் ஒரு கோடியாக சம்பளத்தை குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

முதலில் உயிர் நடிகர்... மொபைல் மெஸேஜ் படம், ஓரெழுத்து படம் என்று ஹிட்களால் 12 கோடி வரை போனது நடிகரின் மார்க்கெட். எனவே 7 கோடி சம்பளம் வாங்கத் தொடங்கினார். ஆனால் சமீபகாலமாக தோல்விகளாகவே சந்திப்பதால் மார்க்கெட் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. பூ கணவர் படத்தில் நடிக்க சம்பளமே வேண்டாம் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டார். பெயருக்கு 50 லட்சம் பேசியிருக்கிறார்கள். பிற படங்களில் நடிக்க ஒரு கோடிதான் கேட்கிறாராம்.

பிக்கப் நடிகர் கிங் குயின் தான் கடைசியாக கொடுத்த ஹிட் படம். அந்த படத்துக்கு பின் 7 கோடி வரை சம்பளம் ஏறியது. ஆனால் சொந்தப் படமாக எடுத்து கையை சுட்டுக்கொண்டதோடு கேரியரையும் கெடுத்துக்கொண்டார். இப்போது ஒரு கோடி சம்பளத்துக்கு நடிக்கிறார்.

வம்பு நடிகர்... இவரை வைத்து படம் எடுக்கவே பயப்படுகிறார்கள். 5 லிருந்து 7 வரை சம்பளம் இப்போது ஒரு கோடியாக சுருங்கி விட்டது.

இவர்களது ஏற்ற இறக்கம் புதுமுக நடிகர்களுக்கு ஒரு பாடம்!

Read more about: gossip, கிசுகிசு
English summary
Soul actor, Pick up actor and Controversy actor are reducing their salary from 7 to 1 cr.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil