அந்த கிராமத்து நடிகரின் 3 படங்கள் போட்டிக்கு வருதுன்னு சொன்னாங்க.. ஒரு சத்தத்தையும் காணோம்!

சென்னை: பயங்கரமாக சிரிக்கும் அந்த கிராமத்து நடிகரின் 3 படங்கள் இந்த விடுமுறை கொண்டாட்ட போட்டியில் களமிறங்குதுன்னு போஸ்டரா போட்டு தள்ளுனாங்க, ஆனால் இதுவரை ஒருபடத்தோட ரிலீஸ் தேதியும் அறிவிக்கவில்லை.

கடைசியா அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சிறப்பாக போகாததால தியேட்டர்காரங்க இந்த விடுமுறை கொண்டாட்டத்தில இரண்டு பெரிய படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்துட்டாங்களாம்.

மூன்று படங்களில் ஒரு படமாவது ரிலீசாகும் என்று பார்த்தால் அதுவும் நடக்குற மாதிரி தெரியலை. இதனால் அந்த கிராமத்து நடிகர் பயங்கர அப்செட் ஆகியுள்ளாராம்.

தங்கமான இயக்குநர்

தங்கமான இயக்குநர்

அந்த தங்கமான இயக்குநர் கடைசியாக இயக்கிய ராஜா படம் மண்ணை கவ்வியதால், தொடர்ந்து அவருக்கு படம் கொடுத்து வந்த அந்த இளம் மாஸ் ஹீரோ அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

வான்டட்டாக

வான்டட்டாக

ஆனால், வான்டட்டாக வந்து வேற வழியில்லாமல் சிக்கிக் கொண்ட அந்த கிராமத்து நடிகர் அந்த அரசியல் தலைவரின் மகன் பெயர் கொண்ட படத்தில் நடித்துள்ளார். இந்த பண்டிகைக்கு உச்ச நடிகர் படத்துக்கு போட்டியா களமிறங்கும் என பார்த்த அந்த படம் இதுவரை ரிலீஸ் தேதி அறிவிக்காமல் கப்சிப் ஆகியுள்ளது.

ஒன்றுக்கே வழியில்லை

ஒன்றுக்கே வழியில்லை

அந்த கிராமத்து நடிகரின் ஒரு படம் ரிலீசாவதற்கே இந்த பெரிய பண்டிகை நாட்களில் வழியில்லையாம். ஆனால், தொடர்ந்து மூன்று படங்களையும் ஒரே நேரத்தில் வெளியிட்டு புரட்சி பண்ணப் போகிறேன் என வேற லெவலில் உதார் விட்ட அந்த நடிகர் தற்போது புலம்பி தவிக்கிறாராம்.

கிடப்பில் போடப்பட்ட படம்

கிடப்பில் போடப்பட்ட படம்

மேலும், கடந்த ஒரு வருடமாக கிடப்பில் போடப்பட்டுள்ள அந்த நடிகரின் பார்ட் 2 படமாவது இந்த மாத இறுதிக்குள் வெளியாகுமா? ஆகாதா? என அந்த நடிகர் குழம்பி வருகிறாராம். ரொம்ப நாளா இப்படியே லேட் ஆகிட்டே போனா அப்புறம் அந்த படம் ரிலீஸ் ஆவதும் ஒன்று ஆகாமல் இருப்பதும் ஒன்று தான் எனவும் கடுப்பில் சத்தம் போட்டுள்ளாராம்.

ஒர்க்கவுட் ஆகாத புது முயற்சி

ஒர்க்கவுட் ஆகாத புது முயற்சி

ஆங்கிலத்தில் பேசி ஸ்டைலாக நடித்து பார்த்தாலாவது தனக்கு செட்டாகிறதா என அந்த கிராமத்து நடிகர் முயற்சி செய்த அந்த புல்லட் படமும் ஒர்க்கவுட் ஆகாததால், பழையபடி தொடர்ந்து கிராமத்து படங்களிலேயே கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X