மொத்தத்தையும் என் ஷோல்டர்ல ஏத்து.. இயக்குநரை டார்ச்சர் செய்த பிரைட் நடிகர்.. அமைதிக்கு காரணமே?

By Staff

சென்னை: அந்த பெரிய பட்ஜெட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு வரை மாங்கு மாங்கு என ஊர் சுற்றி பீலா விட்டுக் கொண்டிருந்த பிரைட் நடிகர் கடந்த சில நாட்களாக காதை பொத்திக் கொண்டு அமைதியாக இருக்க காரணமே அவரது பெரும் எதிர்பார்ப்புக்கு எதிராக விழுந்த இடிதான் என்கின்றனர்.

நடிகரை சந்திக்கும் போது வழக்கம் போல தனக்குத் தெரிந்த வில்லேஜ் பேஸ்ட் சப்ஜெக்டை விதவிதமாக உருட்டியிருக்கிறார் அந்த இயக்குநர். அதில், ஏதாவது ஒன்றை பிக் செய்திருந்தால் கூட இந்த அளவுக்கு லாஸ் ஆகியிருக்காது என்றும் கடைசியில் தன்னுடைய தலையை வெளியே காட்ட முடியாமல் சோலியை முடித்து விட்டாரே என இயக்குநரே உதவி இயக்குநர்களிடம் புலம்பியதாக கிசுகிசுக்கள் புகைந்து வருகின்றன.

gossip kollywood actors gossip

அனைத்து தவறுக்கும் இயக்குநர் தான் காரணம் என்பது போன்ற மாயை உருவாக்கி விட்டு நடிகர் சைலன்ட்டாக மாற காரணமே படத்தின் மேக்கிங்கின் போது ஏகப்பட்ட தலையீடுகள் இருந்தது தான் எனக் கூறுகின்றனர்.

ஒரே படத்துல சம்பளத்தை ஏத்தணும்: இப்போ இல்லைன்னா எப்போ என நினைத்த பிரைட் நடிகர் ஒரே படத்தில் மாஸ் நடிகர் வாங்கும் அளவுக்கு சம்பளம் வாங்க வேண்டும் அதற்கு என்ன பண்ணலாம் என யோசிக்கும் போது, அந்த அனிமல் இயக்குநரை அணுகி கிராமத்துக் கதையெல்லாம் கடைசியா பண்ணி பெருசா அடி வாங்கிட்டேன். அனைத்து ஸ்டேட் ரசிகர்களையும் என் பக்கம் திருப்பக் கூடிய அளவுக்கு கதை இருந்தா சொல்லுங்க இல்லைன்னா கிளம்புங்கன்னு சொல்லிட்டாராம். நடிகரின் ஆசையை புரிந்துக் கொண்ட இயக்குநர் இந்த முறை புகுந்து விளையாடி தன்னுடைய எக்ஸ்பீரியமென்ட்டை பெரிய பட்ஜெட்டில் பண்ணி பார்த்துட வேண்டியது தான் என பண்ண வேலை தான் இந்த படம் என்கின்றனர்.

நான் தான் ஹைலைட்டா தெரியணும்: ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு ஸ்பெஷல் சீன் வைத்து படத்தையே சுவாரஸ்யப்படுத்தணும் என்றெல்லாம் இயக்குநர் நினைத்த நிலையில், சோலோ ஹீரோவாக படம் முழுக்க நான் மட்டும் தான் தெரியணும். அந்த வகையில் கதையை மாத்துங்க, பெருசா பில்டப் ஏத்துங்க, என்ன வேண்டுமானாலும் நான் பண்ண ரெடி என மற்றவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஸ்பேஸை மொத்தமாக மாற்றியதே பிரைட் நடிகர் தான் என பேச்சுக்கள் தற்போது புகைந்து வருகின்றன.

அமைதியோ அமைதி: அதன் காரணமாகவே படத்தின் தோல்விக்குப் பிறகு பிரைட் நடிகர் வெளியே தலைக்காட்ட முடியாமல் அடுத்த படத்தின் அப்டேட்டோடு மீண்டும் ரசிகர்களிடம் கலர் கலர் ரீலா விடலாம் என்றும் இயக்குநர் பக்கமே அனைத்தையும் திருப்பி விடுங்கள் என்றே உத்தரவிட்டுள்ளார் என்றும் பகீர் கிளப்புகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X