ரூட்டை மாற்றும் நம்பர் நடிகை.. என்ன காரணம் தெரியுமா?
Recommended Video
சென்னை: ஹீரோ படங்களில் நடிக்காமல், தானே மெயின் கதாபாத்திரமாக நடித்து வந்த நம்பர் நடிகை திடீரென தனது ரூட்டை மாற்ற தொடர் தோல்விகள் தான் காரணமாம்.
இருக்கும் மார்க்கெட்டை கெடுத்து கொள்ளாமல், சூதானமாக பிழைத்துக் கொள் என்று அவரது காதலன் கூறிய அட்வைஸ் கேட்டுத்தான் அந்த நம்பர் நடிகை மீண்டும் மாஸ் ஹீரோக்களுடன் நடித்து வருகிறாராம்.
ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை துவங்கிய அந்த நம்பர் நடிகை, தற்போதெல்லாம் அந்த மாஸ் நடிகரின் வழியை பின்பற்றி யாருக்கும் பேட்டி கொடுப்பது இல்லையாம்.

எப்போ கல்யாணம்
சுமார் நான்கு வருடங்களாக டேட்டிங் மட்டுமே செய்து கொண்டிருக்கும் அந்த நம்பர் நடிகை எப்போ தான் கல்யாணம் செஞ்சுப்பாங்கன்னு கோலிவுட்டே எதிர்பார்த்து காத்திருந்தாலும், இப்போதைக்கு டேட்டிங் மட்டும் தான் அது பத்தி அப்புறம் பார்த்துக்கலாம்னு ஜாலியா சுத்துறாங்களாம். கல்யாணம் பண்ணிக்கிட்ட தனது மார்க்கெட் எங்கே சரிந்து விடுமோ என்ற பயம் தான் அதை தள்ளிப்போடுவதற்கான காரணம் என கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

ரொம்ப தைரியம்
திருட்டுக் கதை பிரச்சனையில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் அந்த பிரபல இயக்குநரின் படத்தில் நடித்து வரும் நம்பர் நாயகி, அவர் இயக்கத்தில் நடித்த முதல் படத்தில் தான் நடித்திருக்கவே கூடாது என்றும் அது தான் தான் செஞ்ச லூசுத்தனமான காரியம் என்றும் சமீபத்தில் ரொம்ப தைரியமாக கூறியுள்ளார்.

அய்யோ வேண்டாம்
கதையின் நாயகியாக அவர் நடித்த ஒரு சில படங்கள் ஓடிய நிலையில், தொடர்ந்து அதே போன்ற கதைகளுடன் இயக்குநர்கள் நம்பர் நாயகியை ஆசை வார்த்தைகளை கூறி மயக்கி அடுத்தடுத்து ஃபிளாப் படங்களை கொடுத்தனர். இதனால், தற்போது, நீங்க தான் மேடம் கதைக்கு ஹீரோ என வரும் இயக்குநர்களை கண்டாலே அய்யோ வேண்டாம் என அலறுகிறாம்.

அதுக்குத் தான் இது
காமெடி நடிகர் தனது அறிமுக அரசியல் படத்திலேயே வெற்றி கொடுத்த நிலையில், தற்போது அவருடன் இணைந்து பக்தி படம் ஒன்றில் நம்பர் நடிகை நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அந்த மொக்கை மர்டர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், கலைத்துறையில் மூத்த நடிகர், ஆபாசமாக பேசியதற்கு பதிலடி கொடுக்கத்தான் இந்த படத்தில் கமீட் ஆகியுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











