ஓஹோ அப்ப அந்த நடிகை ‘அட்ஜெஸ்ட்’ செய்ய இது தான் காரணமா?
தன்னுடைய காதலருக்காகத் தான் பெரிய நடிகரின் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம் நடிகை.
Recommended Video

சென்னை: தன்னுடைய காதலரை பெரிய இயக்குனராக்கிவிட வேண்டும் என மிக தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறாராம் பெரிய நம்பர் நடிகை.
தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் அந்த நடிகை. முதல் காதல் வம்பில் முடிய, இரண்டாவது காதல் நாட்டியம் ஆடி கை விட்டுப் போனது. இதனால் தவித்துக்கொண்டிருந்த நடிகைக்கு ஆறுதலாய் வந்தார் மூன்றாவது காதலர். இப்போது சிவனே கதியென கிடக்கிறார் நடிகை.

ஏற்கனவே மூன்றெழுத்து முன்னணி நடிகரிடத்தில் அவருக்கு கால்ஷீட் வாங்கி தந்த நடிகை, தற்போது தளபதி நடிகரை இயக்கும் முயற்சியில் காதலரை ஈடுபட வைத்திருக்கிறார். இதற்காக பலமாக சிபாரிசு செய்து, சந்திப்புக்கும் ஏற்பாடு செய்தார்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது சால்ட் அன்ட் பெப்பர் நடிகர் படத்தில் நடித்து வரும் நடிகை, ஹீரோவுக்காக தனது கேரக்டர் உள்பட பல்வேறு அட்ஜெஸ்ட்மென்ட் செய்துள்ளார். இதற்கு பிரதிபலனாக, காதலரின் அடுத்தப்படத்துக்கு அந்த நடிகரின் கால்ஷீட்டை நடிகை கேட்பதாக கோலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டுமே நடித்து வந்த நடிகை, இந்த நடிகருக்காக இறங்கி வந்து நடிக்க சம்மதித்தார். அந்த அட்ஜெஸ்ட்மென்ட் எல்லாம் காதலருக்காக தானா என்கின்றனர் திரைத்துறையினர்.


Click it and Unblock the Notifications











