நீங்க சொல்ற எல்லாத்துக்கும் ஓகே.. நம்பர் நடிகைக்கு டயல் செய்து கெஞ்சிய பிரபல நடிகரின் மனைவி?
சென்னை: காப்பி இயக்குநர் படத்தின் மூலம் நம்பர் நடிகைக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு சில பல காரணங்களால் அவரது கை நழுவி போனதாக கூறப்பட்டது.
நம்பர் நடிகையும் விருது நடிகையை போலவே நமக்கும் வட இந்தியா செட் ஆகல என திரும்பி விட்டார்.
ஆனால், இந்நிலையில், நம்பர் நடிகைக்கே டயல் செய்து அந்த நடிகரின் மனைவியும் தயாரிப்பாளருமான அவர் நடிகையை கன்வின்ஸ் செய்துள்ளாராம்.

நம்பர் ஒன்
பெயரில் கடைசி நம்பராக இருந்தாலும் நடிப்பில் தான் தான் நம்பர் ஒன் என தொடர்ந்து நிரூபித்து வருகிறார் அந்த நம்பர் நடிகை. தென்னிந்தியாவில் பல சிகரங்களை தொட்டுள்ள அவருக்கு வட இந்திய வாய்ப்பு வலுக்கட்டாயமாக கிடைத்த நிலையில், இந்த முறை வேண்டாம் என சொல்ல முடியாத நபர் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்டார்.

பெரிய நடிகர் படம்
வட இந்தியாவில் வாய்ப்பு தேடி செல்வது போல இளம் நடிகர்கள் படத்தில் எல்லாம் கமிட் ஆகவில்லை அந்த நடிகை. இருப்பதிலேயே பாக்ஸ் ஆபிஸில் கிங்கான பெரிய நடிகரின் படத்தில் தான் அவருக்கு ஜோடியாக நடிக்க காப்பி இயக்குநர் கேட்டுக் கொண்டதன் காரணமாக ஓகே சொன்னார்.

நீங்க வேணாம்
ஏற்கனவே வட இந்திய படத்தில் நடிக்கப் போய் கடைசி நேரத்தில் நீங்க வேணாம் என சொல்லி விருது நடிகையை விரட்டி விட்டதை போலவே இந்த படத்தில் சில பல காட்சிகளில் நடித்த பின்னர் அவரை சில காரணங்களுக்காக நீங்க வேணாம் என வெளியேற்றியதும் கடும் அப்செட் ஆனார் நம்பர் நடிகை.

கெஞ்சிய மனைவி
நடிகையும் மீண்டும் இந்த பக்கம் வந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த நிலையில், ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்சனைகள் நம்மை சுற்றி நடந்து வருகின்றன. இதில், இந்த பிரச்சனை எதுக்கு என யோசித்த நடிகரின் மனைவி இருவரும் நடித்த காட்சிகளை போட்டு பார்க்க, நம்பர் நடிகையின் நடிப்பில் மிரண்டு போய்விட்டாராம். உடனடியாக அவருக்கு போன் பண்ணி நீங்களே இந்த படத்தில் தொடரலாம் உங்கள் டிமாண்டுக்கு நாங்கள் செவி சாய்க்கிறோம் என கெஞ்சி உள்ளாராம்.

குறைவான நாட்களே
படத்தின் மொழி பிரச்சனை உள்ளிட்ட எந்த பிரச்சனையும் இல்லை என்பதாலும், மேலும், சில நாட்கள் மட்டுமே அவரது கால்ஷீட் இருப்பதால் அந்த நடிகையே நடித்துக் கொள்ளட்டுமே என கணவர் செய்த சிபாரிசு தான் மனைவி இப்படி இறங்கி வர காரணம் என்றும் கூறப்படுகிறது. நல்லபடியா முடிஞ்சு ரிலீஸ் ஆனால் சரி!


Click it and Unblock the Notifications











