உன் ரூட்ட நீ பார்த்துக்கோ.. என் ரூட்ட நான் பார்த்துக்கறேன்.. நம்பர் நடிகை திடீர் முடிவு?

Recommended Video

Gossip | Lead Role Actress 3rd Breakup

சென்னை: நம்பர் நடிகைக்கும் அந்த ரெளடி இயக்குநருக்கும் பல வருஷமா இருந்த காதல் இப்போது பிரேக்கப்பை நோக்கி நகர்வதாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.

நம்பர் நடிகை பின்னாலே அலைந்து திருமணம் செய்து கொள்ள எவ்வளவோ முயன்ற அந்த ரெளடி இயக்குநருக்கு, கடைசி வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

மேரேஜ்லாம் எனக்கு செட்டாகாது, உன் ரூட்ட நீ பார்த்துக்கோ.. என் ரூட்ட நான் பார்த்துக்கறேன் என திருமண டார்ச்சர் பண்ண அந்த இயக்குநருக்கு கறாரான பதில் கூறிவிட்டாராம் அந்த நம்பர் நடிகை.

4 வருஷம்

4 வருஷம்

ஏற்கனவே இரு பிரபலங்களுடன் காதல், திருமணம் என எல்லாம் முடிந்து பின்னர் பிரேக் செய்த அந்த நம்பர் நடிகை கடந்த 4 வருஷங்களாக புதிய ஆடு ஒன்று சிக்கியது என்று அதனுடன் சுற்றித் திரிந்து வந்தார்.

தன்னை மறந்து விட்டார்

தன்னை மறந்து விட்டார்

நம்பர் நடிகையுடன் கிடைத்த காதல் மயக்கத்தால், தன்னையே மறந்த அந்த ரெளடி இயக்குநர், தொடர்ந்து நடிகையுடன் ஊர் சுற்றுவது அவருக்கு பாடிகாடாக இருப்பது போன்ற வேலைகளை மட்டுமே செய்து வந்து, தான் ஒரு இயக்குநர் என்பதையே மறந்து விட்டார்.

திருமண டார்ச்சர்

திருமண டார்ச்சர்

தனது மொத்த அன்பையும் கொட்டி அந்த நடிகையை மயக்கி எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பூனை போல சுற்றி வந்த அந்த இயக்குநர் நினைத்தது இதுவரையில் நடைபெறவில்லை. ப்ளீஸ் என்னை கல்யாணம் பண்ணிக்கோங்க பண்ணிக்கோங்க என திருமண டார்ச்சரும் கொடுத்து பார்த்துவிட்டாராம் அந்த ரெளடி இயக்குநர்.

செட் ஆகாது

செட் ஆகாது

மேரேஜ் லைஃப்லாம் எனக்கு செட் ஆகாது.. நான் இன்னும் சினிமாவுல சாதிக்கணும். என் பின்னாடி சுத்தி உன் டைம் அண்ட் திறமையை நீயும் வேஸ்ட் பண்ணாத, உன் ரூட்ட நீ பார்த்துப் போ, என்னை டார்ச்சர் பண்ணாத என அந்த நடிகை லேட்டஸ்ட்டாக கடித்துள்ளார்.

மனம் உடைந்த இயக்குநர்

மனம் உடைந்த இயக்குநர்

இரண்டு ஆண்டுகளாக புதுப் படங்களும் தொடங்கவில்லை. தனது தயாரிப்பில் தொடங்கிய படத்தையும் அந்த நடிகை கண்டுகொள்ளவில்லை. இனிமே உன் வழியை நீ தான் பார்த்துக்கணும் என அந்த இயக்குநருக்கு நெருங்கிய நண்பர்களும் ஃப்ரீ அட்வைஸ் கொடுக்க தொடங்க அந்த இயக்குநர் மனமுடைந்து போயுள்ளாராம்.

மீண்டும் சிங்கிள்

மீண்டும் சிங்கிள்

கடந்த ஆண்டு இறுதி வரை மிங்கிளாக இருந்த அந்த நடிகை புதிய ஆண்டு தொடங்கிய நிலையில், சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தை சந்தோஷமாக பதிவிட்டு, தனது ரூட் க்ளியர் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். பாவம் ஆனால், அந்த இயக்குநர் கொண்டாட்டங்கள் ஏதும் இன்றி வீட்டில் முடங்கியுள்ளார். சீக்கிரம் பழைய ரெளடியாக பட்டையை கிளப்புவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X