»   »  நான் சந்தோஷமா இருந்தா பிடிக்காதே... புலம்பும் "நம்பர்"

நான் சந்தோஷமா இருந்தா பிடிக்காதே... புலம்பும் "நம்பர்"

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழின் முன்னணி நடிகையாக வலம்வரும் அந்த நம்பர் நடிகையின் வீட்டில் சமீபத்தில் நடந்த ரெய்டு நடிகையை ஆட்டிப் படைத்து விட்டதாம்.

காதல் தோல்வியால் நொந்து போயிருந்த நடிகை மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தபோது ரசிகர்கள் கொடுத்த ஆதரவு நடிகைக்கு இழந்த உற்சாகத்தை மீட்டுத் தந்தது.

ஏற்ற மாதிரி படங்களும் வரிசையாக ஹிட்டடிக்க மீண்டும் கோலிவுட்டின் ராணியாக வலம்வர ஆரம்பித்தார் நடிகை. இடையில் தான் நடிக்கும் படங்களின் விழாக்கள், பேட்டிகள் என்று எதிலும் தலை காட்டாமல் ஒதுங்கியே இருந்தார்.

இந்நிலையில் நடிகைக்கு இருக்கும் அந்தஸ்தைப் பார்த்து சிலபல விளம்பரங்கள் நடிகையைத் தேடி வந்தன. சரி என்று நடிகையும் இறங்கிவந்து விளம்பரம், கொஞ்சம் விழாக்கள், பேட்டிகள் என தலை காட்ட ஆரம்பித்தார்.

ஆனால் சமீபத்தில் நடிகையின் வீட்டில் நடந்த ரெய்டு நடிகையை மிகவும் பாதித்து விட்டதாம். இப்பொது தான் வெளியில் தலை காட்ட ஆரம்பித்தேன் அதுவும் மற்றவர்களுக்கு பிடிக்கவில்லை போல என்று புலம்பி வருகிறாராம்.

இதனால் தற்போது எல்லாவற்றிற்கும் தடை போட ஆரம்பித்திருக்கும் நடிகை பேட்டி, விழா, விளம்பரம் என்று யார் வந்தாலும் கையெடுத்துக் கும்பிட்டு வாசலுடன் அனுப்பி விடுகிறாராம்.

சினிமாவுல இதெல்லாம் சாதாரணமப்பா....

English summary
The Leading Number Actress affected the recent raid , Now she Again Banned for all events, Movie Promotions and Media interviews.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil