மார்க்கெட் காலி.. காதலனிடம் தஞ்சம் புகுந்த நம்பர் நடிகை.. இது பெரிய ஸ்டோரியால இருக்கு!

சென்னை: டாப் ஹீரோக்களுக்கு இணையாக, நடித்து வந்த அந்த நம்பர் நடிகை நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பல படங்கள் ஏகப்பட்ட லாஸை சந்தித்துள்ளன.

அதன் காரணமாகத்தான் பெரிய ஹீரோக்கள் படத்தில் நாயகியாக நடிக்க சட்டென்று ஒப்புக் கொண்டு தனது ரூட்டை அந்த நடிகை மாற்றினார்.

ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் செலவுகளை ஜீரணிக்க முடியாமல், தயாரிப்பாளர்கள் வெளிப்படையாக புலம்ப துவங்கி உள்ளனர்.

சரியும் மார்க்கெட்

சரியும் மார்க்கெட்

நம்பர் நடிகைக்காகவே தியேட்டருக்கு ஆடியன்ஸ் சென்ற காலம் எல்லாம் தற்போது மாறி விட்டது. ஹீரோக்களுக்கே சவால் விட்டு சோலோவாக நடித்து வந்த நாயகியின் சில படங்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு வெளியான பல படங்கள் தயாரிப்பாளருக்கு பட்டை நாமத்தையே போட்டுள்ளன.

செலவு பார்ட்டி

செலவு பார்ட்டி

ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னை சுற்றி பல பேர்களை வைத்துக் கொண்டு, இஷ்டத்துக்கு தயாரிப்பாளர்கள் காசை கரியாக்கி வருகிறார் என்ற குற்றச்சாட்டை கொஞ்சம் கொஞ்சமாக தயாரிப்பாளர்கள் அந்த நம்பர் நடிகை மீது எடுத்து வைத்து வருகின்றனர். மேலும், தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

டவுட்டு தான்

டவுட்டு தான்

கோயில் கோயிலாக சென்று, தனது புதிய ஆன்மிக படத்துக்கான மறைமுக புரொமோஷனில் ஈடுபட்ட அந்த நடிகை நடிப்பில் உருவாகி உள்ள அந்த படம் என்ன ஆகும் என்ற டவுட்டு தற்போது, படத் தயாரிப்பாளருக்கு எழுந்துள்ளது. அந்த காமெடி இயக்குநர் வேற, வீர வசனம் போல, சம்மருக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

கிளாஷுக்கு இடையே தாங்குமா?

கிளாஷுக்கு இடையே தாங்குமா?

சம்மரில் ஏற்கனவே பல டாப் நடிகர்களின் படங்கள் கோலிவுட் கோதாவில் குதிக்க உள்ள நிலையில், இந்தம்மாவும், தனது படத்தை களம் இறக்கினால், முதலுக்கே மோசம் வரும் என்ற அச்சம் அந்த படக்குழுவுக்கும் ஏற்பட்டுள்ளதாம். இதனால், படத்தின், ரிலீஸ் தேதியை மாற்றி அமைக்கவும் திட்டுமிட்டு வருகிறார்களாம்.

குறைந்தது சம்பளம்

குறைந்தது சம்பளம்

பல கோடிகளில் சம்பளம் வாங்கி வந்த அந்த டாப் நடிகையின் சம்பளம், தொடர் தோல்விகளால் கிடுகிடுவென இறங்கு முகத்தை கண்டுள்ளதாகவும், புதிய படங்கள் கமிட் ஆனாலே, போதும் என்ற மனநிலைக்கு வந்த அவருக்கு, பெரிய படத்திலும், சைடு ரோல் தான் கிடைத்துள்ளதாகவும், கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

கழட்டி விட்ட உச்ச நடிகர்கள்

கழட்டி விட்ட உச்ச நடிகர்கள்

கடந்த ஆண்டு உச்ச நடிகர்கள் படத்தில் தொடர்ந்து கமிட் ஆன அந்த நடிகைக்கு, தற்போது, அந்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்க வில்லையாம். பாலிவுட் நாயகிகளை கோலிவுட்டுக்கு இறக்கும் டாப் நடிகர்கள், இந்த நம்பர் நடிகையை தற்போது கண்டு கொள்ளாமல் கழட்டி விட்டுள்ளார்களாம்.

காதலனிடம் தஞ்சம்

காதலனிடம் தஞ்சம்

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை, வேறு வழி இல்லாமல், காதலன் இயக்கத்தில் உருவாகும் அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டுத் தஞ்சம் அடைந்துள்ளாராம். ஏற்கனவே இந்த காம்போவை மக்கள் பார்த்து விட்டார்களே என அவர் கூறியும், நடிகையின் புலம்பலால், வேறு வழியில்லாமல் தான் சேர்த்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X