»   »  அதீத ஆசையால் இயக்குநரை ஆட்டிப் படைக்கும் நடிகை

அதீத ஆசையால் இயக்குநரை ஆட்டிப் படைக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர்களை மிஞ்சி பேருடனும், புகழுடனும் திகழ்ந்து வரும் நம்பர் நடிகை அறிமுக இயக்குநரை படுத்தி வருவதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக்.

மாயமான அந்த பேய்ப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததால், மீண்டும் அதேபோல ஒரு பேய்ப் படத்தில் நம்பர் நடிகை நடித்து வருகிறார்.

Number Actress Clash with Young Director

இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கிய 2 வது நாளிலே இயக்குநருக்கும், நடிகைக்கும் முட்டிக்கொண்டு விட்டதாம்.

இதற்கான காரணம் என்னவென்று விசாரித்தால் இயக்குநர் கதை சொன்னபோது நன்றாகத் தான் சொன்னாராம். ஆனால் படமாக எடுக்கும்போது அவருக்கு அனுபவம் போதவில்லையாம்.

அதனால் தனது பேச்சை கேட்டு படம் எடுக்கும் படி நடிகை தயாரிப்பாளரை வற்புறுத்த, பதிலுக்கு தயாரிப்பாளரும் அப்படியே செய்து விடலாம் என்று கூறிவிட்டாராம்.

மேலும் முக்கியமான காட்சிகளை தானே இயக்கவும் நடிகை ஆசைப்பட, படம் நன்றாக வரவேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம் தான் என்று தயாரிப்பாளர் ஓகே சொல்லி விட்டாராம்.

அதன்படி அந்த அறிமுக இயக்குநரை அழைத்த தயாரிப்பாளர் நடிகை சொல்வதைக் கேளுங்க, என்று உத்தரவு போட்டு விட்டாராம்.

தயாரிப்பாளரின் மீற முடியாத உத்தரவால் நடிகையின் மீது ஏகக் கடுப்பில் இருக்கிறாராம் அந்த இளம் இயக்குநர்.

English summary
The Number actress is Currently Starring in the story of the heroine Importance Movie. Shooting of the film began on the 2nd day, Misunderstood Start with director and Actress.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil