நம்பர் நாயகியின் திடீர் மாற்றம்.. கொஞ்சம் ஸ்பேஸ் கிடைச்சா போதும்.. இன்னொரு ஹீரோயினா டபுள் ஓகே!
சென்னை: ஹீரோக்கள் இல்லாமல், தானே முழுப்படத்தையும் தாங்கி நடித்த காலம் எல்லாம் மாறி, இப்போ தொடர்ந்து, டபுள் ஹீரோயின் சப்ஜெக்டிலேயே அந்த நம்பர் நடிகை நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நிலைமை எல்லாம் தற்போது, அந்த நடிகைக்கு டோட்டலாக மாற்றம் கண்டு, அவரது மார்க்கெட் ஆட்டம் கண்டது தான் இதற்கு காரணம் என பேசிக் கொள்கின்றனர்.

நானே ஹீரோ
பெரிய ஹீரோக்களுடன் நடித்து வந்த நம்பர் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட சில சம்பவங்களால், கொஞ்ச காலம் ஃபீல்ட் அவுட் ஆகி இருந்தார். பின்னர், மீண்டும் வந்த அவர், நானே ஹீரோவாக நடிக்கப் போகிறேன் என அதிரடி காட்டி, தான் விட்டுச் சென்ற இடத்தை மீண்டும் சட்டென பிடித்தார்.

காதல் பிரச்சனை
அந்த விரல் நடிகருடன் ஏற்பட்ட காதல் பிரச்சனை மற்றும் அந்த நடன இயக்குநருடன் ஏற்பட்ட கல்யாண பிரச்சனை என நம்பர் நடிகையின் வாழ்க்கையில், பெரிய பூகம்பமே வெடித்தன. தனது வாழ்க்கையில், ஏற்பட்ட பல தடைகளை கடந்து, கோலிவுட்டில் உச்ச நடிகையாக தன்னை மீண்டும் நிரூபித்தார்.

வயசாகுது
செகண்ட் இன்னிங்ஸை வெற்றிகரமாக தொடங்கிய அந்த நம்பர் நடிகைக்கு, வயது ஆவது ஒரு பெரிய இடைஞ்சலாக இருக்கிறது. மேலும், மூத்த நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து விட்டு, இளம் நடிகர்களுடன், நடித்தால், அந்த படங்களை ரசிகர்கள் ஏற்காமல் படுதோல்வியில் கொண்டு விட்டு விடுகிறது.

மார்க்கெட் சரிவு
லீடு ரோலில் நடித்து, முழு படத்தையும் தாங்கி வந்த அந்த நம்பர் நடிகைக்கு, கடந்த ஆண்டு, மிகப்பெரிய மார்க்கெட் சரிவு ஏற்பட்டது. அவர் மட்டுமே நாயகியாக நடித்த படங்கள், தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்ததால், அவரது சம்பளம் பாதியாக குறைந்தது. டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்களிலும் நடிக்க வேண்டிய சூழல் உருவானது.

கொஞ்ச ஸ்பேஸ்
மேலும், இந்த வருட தொடக்கத்தில் வெளியான, அந்த உச்ச நடிகரின் படம் மற்றும், அந்த உச்ச நடிகரின் அடுத்த படத்திலும், கொஞ்சம் ஸ்பேஸ் கிடைச்சாலும், நடிக்க அந்த நம்பர் நடிகை ஒத்துக் கொண்டுள்ளது, அவரது ரசிகர்கள் மற்றும் கோலிவுட்டில் மிகப்பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி இறங்கிட்டாரே
எப்படி இருந்த ஹீரோயின், இப்படி ஆகிட்டாரே என காமெடியாக வரும் வசனத்தை போல, அவருடைய சம்பளம் பாதியாக குறைந்ததால், புதிய படங்களில், இரண்டு அல்லது மூன்று நாயகிகளுடன் சேர்த்து நடிக்கவும் சம்மதித்து வருகிறார். சீக்கிரமே தனது மார்க்கெட் காலி ஆகிவிடும் என்பதை அறிந்த அந்த நம்பர் நடிகை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











