ஷுட்டிங் இல்லை.. காதலருடன் ஜாலியாக நேரத்தை செலவழிக்கிறாராம் நம்பர் நடிகை!
சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமும் வீட்டில் முடங்கிக் கிடக்கும் நேரத்தில், அந்த நம்பர் நடிகை, இதுதான் சாக்கென்று தனது காதலனுடன் உல்லாசமாக பொழுதை கழித்து வருகிறாராம்.
இப்போது தான் ரொம்ப வருஷம் கழிச்சு, புதுப் படத்தை இயக்கலாம் என நினைத்த அந்த இயக்குநர், மறுபடியும் வீட்டுக்குள்ளேயே முடங்கிப் போயுள்ளார்.
கடந்த வருஷம், இந்த வருஷம் என தொடர்ந்து, பல மொழிகளில் சுழன்று சுழன்று ஓய்வின்றி நடித்து வந்த அந்த நடிகை தற்போது, காதலனுடன் ஜாலியாக இருந்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அப்செட்
நம்பர் நடிகைக்கு இந்த விடுமுறை காலம் ஜாலியாக இருந்தாலும், ரெளடி இயக்குநருக்கு கடுப்பையே ஏற்படுத்தியுள்ளது. இத்தனை காலம், வீட்டில் முடங்கியும், பாடி காட் வேலை பார்த்தும் வந்த அவர், மறுபடியும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க பிடிக்காமல் கடும் அப்செட் ஆகி உள்ளார்.

குஜால்
ஆனால், இதுவும் செம ஜாலியாத்தான் இருக்கு, மனசுக்கு பிடிச்ச காதலியுடன், ஒரே வீட்டில் எந்த ஒரு வொர்க் பிரெஷரும் இல்லாமல் இப்படி இருப்பதும் நல்லாத்தான் இருக்கு, செம்மையா வாழறடா என அந்த இயக்குநரின் நண்பர்கள் சிலர் பொறாமையுடன் கிண்டலடித்தும் பேசி உள்ளது கோலிவுட்டில் கசிந்துள்ளது.

ஒரே சத்தம்
இவங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்குள் ஜாலியாக ச்.. ச்.. ச்..ன்னு கொடுக்கும் முத்த சத்தம் பக்கத்து, அக்கத்து வீடுகள் வரை கேட்கும் அளவுக்கு கொரோனா குராண்டினை கொண்டாடி வருகின்றார்களாம். அந்த ஹீரோயினும், அடுத்த பட டிஷ்கஷன் என்கிற பேரில், அந்த இயக்குநர் உடனே பொழுதை கழித்து வருகிறாராம்.

ரிலீஸ் ஆகுமா?
சம்மரில் அந்த சாமி படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்ட நிலையில், இப்போ இருக்குற நிலவரத்தையும் கொரோனா கலவரத்தையும் பார்த்தால், இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்கு பின்னர், தான் நம்பர் நடிகை அருள் பாலிப்பார் என தெரிகிறது. சமத்து நடிகைக்கு பதிலாக ரெளடி இயக்குநர் படத்தில் அந்த ஒல்லி நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிகிறது.

நள்ளிரவு பைக் ரைட்
மேலும், நள்ளிரவில், ஆட்கள் அதிகம் இல்லாத இடங்களுக்கு, இருவரும் தனியாக பைக் ரைடு சென்று வருகின்றனர், சில இடங்களில் செல்ஃபி எடுத்துள்ள புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் அந்த ரெளடி இயக்குநர் கசியவிட்டு வருகிறார். எல்லாம் சரி, கல்யாணம் மட்டும் எப்போதென்று சொல்லவே மாட்றாங்களே..


Click it and Unblock the Notifications











