சத்தமா சொல்லாதீங்கய்யா, தலைவி காதுல விழுந்துடப் போகுது
சென்னை: டிவி நடிகரின் படத்தை பார்த்தவர்கள் நம்பர் ஹீரோயின் ஹீரோவுக்கு சித்தி போன்று தெரிவதாக கூறியுள்ளனர்.
நம்பர் நடிகையும், டிவி ஹீரோவும் சேர்ந்து நடித்த படம் வெளியாகியுள்ளது. நம்பர் நடிகையுடன் ஆசைப்பட்டு ஜோடி சேர்ந்தார் டிவி நடிகர். டிவி நடிகருக்கு இணையாக இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக நடிகை தனது சொந்த மாநிலத்திற்கு சென்று ஆயுர்வேத சிகிச்சை எல்லாம் எடுத்தார்.
புதுப்பொலிவுடன் திரும்பி வந்து போட்டோஷூட் நடத்தினார். இந்நிலையில் படம் பார்த்தவர்களோ நடிகை டிவி நடிகருக்கு சித்தி போன்று வயதாக தெரிவதாக கூறியுள்ளனர்.
நடிகையின் ரசிகர்களோ யாரைப் பார்த்து...எங்க தலைவி எப்பொழுதுமே இளமையாகத் தான் இருப்பார் என்று பெருமையாக கூறி வருகிறார்கள். நடிகை சீனியர் ஹீரோக்களுக்கு தான் சரிபட்டு வருவார் என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
சத்தத்தை கொறை, சத்தத்தை கொறை தலைவி காதில் விழுந்தால் பீல் ஃபண்ணுவாங்க என்பது ரசிகர்களின் கவலை.


Click it and Unblock the Notifications











