எக்கச்சக்க போட்டி.. இனிமே அந்த படம் ரிலீசாகுறது ரொம்ப கஷ்டம்.. ஆனா அவங்க ஹேப்பியாம்!
சென்னை: நம்பர் நடிகையின் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டது. அந்த படத்தை தயாரித்து, இயக்கியவருக்கு பெரிய இடியாக விழப் போகுதாம்.
இருக்குறதுலே இந்த வாரம் தான் பெரிய போட்டி இல்லாமல் இருந்திருக்கு, அப்படி இருக்க ரிலீஸ் தேதியை தள்ளிப் போட்டு, இனிமே அந்த படம் இப்போதைக்கு ரிலீஸ் ஆகாதபடி செய்துள்ளனர்.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாசம் என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து, எக்கச்சக்க படங்கள் வரிசை கட்டி நிற்கும் நிலையில், முதலிலே அட்ஜஸ்ட் பண்ணி சூட்டோடு சூட்டா படத்தை தள்ளி விட்டுருக்கலாம் என அந்த இயக்குநருக்கு, பல இடங்களில் இருந்தும் ஃப்ரீ அட்வைஸ் வருகிறதாம்.

கடைசி நேரம்
ரொம்ப நாளாவே தள்ளிப் போய்கிட்டு இருக்குற அந்த நம்பர் நடிகையின் படம், ஒருவழியா இந்த முறையாவது ரிலீஸ் ஆகிடும் என எதிர்பார்க்கப்பட்ட, நிலையில், கடைசி நேரத்தில் இரண்டு சின்ன படங்களுக்கு பயந்து கிட்டு, ரிலீஸ் பண்ணாம தள்ளிப் போட்டுட்டது, படக்குழுவுக்கு இப்போ பெரிய பிரச்சனையா உருவாகி இருக்கு.

ரொம்ப கஷ்டம்
கிடைச்சதை வச்சு படத்தை தள்ளி விடாம, இன்னும் நிறைய வேண்டும் என ஓவரா எதிர்பார்த்து, அந்த இயக்குநர் பெரிய தப்பு கணக்கு போட்டுட்டார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் பேசி வருகின்றன. மார்ச் மாதம், ஏப்ரல் மாதம் எல்லாம் பெரிய பெரிய படங்கள் வருவதால், இதற்கு முன் கிடைத்த அளவுக்கு கூட தியேட்டர் எண்ணிக்கை கிடைக்க வாய்ப்பில்லையாம்.

அவங்க ஹேப்பி தான்
தயாரிப்பாளரும், இயக்குநருமான அந்த நபர், நம்பர் நடிகை குறித்து பேசியதற்கு, அவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என ரொம்ப ஹேப்பியா இருக்காராம் அந்த நம்பர் நடிகை. மேலும், அந்த படம் ரிலீஸ் ஆகாமல் இருப்பதே தனது, தற்போதைய மார்க்கெட்டுக்கு நல்லது என்றும் கூறியுள்ளாராம்.

ரொம்ப கஷ்டம்
கிடைத்த வாய்ப்பை நழுவ விட்ட அந்த தயாரிப்பு தரப்பு, இனிமேல் எப்படி அந்த கேம் படத்தை ரிலீஸ் செய்யப் போகிறதோ, பெரிய நடிகர்கள் படங்களே ஆனாலும், லேட்டா ரிலீஸ் ஆனால், நிச்சயம் தோல்வியை தழுவும் நிலையை இதற்கு முன்னதாகவும், சமீபத்திலும் பார்த்த உதாரணங்கள் பல இருக்க, அந்த படம் வெளியாவதும், தப்பிப்பதும் ரொம்ப கஷ்டம் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











