பாவம்.. அந்த நம்பர் நடிகைக்கு இந்த படத்துலையும் டம்மி ரோல் தானாம்.. அப்செட்டான ரசிகர்கள்!
சென்னை: சமீபத்தில் வெளியாகியுள்ள அந்த உச்ச நடிகரின் ராஜாங்க படத்தில் அந்த நம்பர் நடிகைக்கு டம்மி ரோல் தானாம்.
கடந்த ஆண்டு வெளியான அந்த கிராமத்து சப்ஜெக்ட் படத்தில் செம்ம கெத்தான ரோல் கிடைத்திருந்த நிலையில், அதற்கு அடுத்து வெளியான விளையாட்டு படம் மற்றும் இந்த ராஜாங்க படத்திலும் சும்மா டூயட் பாடவும், கிளாமர் காட்டவும் மட்டுமே அந்த நம்பர் நடிகை பயன்படுத்தியுள்ளார்களாம்.
இதனால் அந்த நம்பர் நடிகையின் அசத்தலான நடிப்பை காண தியேட்டருக்கு போன அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

அழகா இருக்காங்க
அந்த கடவுள் பெயர் கொண்ட கேமராமேன் கை வண்ணத்தால் நம்பர் நடிகை ஒவ்வொரு பிரேமிலும் அழகாக வலம் வருகிறார். சேலையில், கொஞ்சம் க்யூட்டாகவும் கொஞ்சம் ஹாட்டாகவும் நடித்து அசத்தியிருக்கிறார் அந்த நம்பர் நடிகை.

சின்ன போர்ஷன்
ஆனால், படத்தில் அந்த நம்பர் நடிகைக்கு ரொம்ப சின்ன போர்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாம். மொத்தமாக பார்த்தால் ஒரு வார கால்ஷீட்டில் படத்தை முடித்து கொடுத்திருப்பார் என்றே தோன்றுகிறது.

முக்கியத்துவம் இல்லை
உச்ச நடிகர் படம் என்பதால், மொத்த முக்கியத்துவமும் அவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், மகள் நடிகைக்கு இருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கூட அந்த நம்பர் நடிகைக்கு தராதது அவரது ரசிகர்களை அப்செட் செய்துள்ளது.

ரூட்டை மாத்துவாரா
பெரிய நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்கிறது என சோலோவாக நடிப்பதை விட்டுவிட்டு தொடர்ந்து அடுத்தடுத்த பெரிய படங்களில் அந்த நம்பர் நடிகை நடித்து வந்தார். ஆனால், மாஸ் ஹீரோக்கள் படங்களில் அவருக்கான முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருவதால், மீண்டும் சோலோ ஹீரோயின் ரூட்டுக்கே மாற அந்த நம்பர் நடிகை முடிவு செய்துள்ளார்.

இரண்டாவது தவறு
தனது வாழ்க்கையிலே தான் செய்த முதல் தவறு என அந்த நோலன் இயக்குநரின் ஹாலிவுட் காப்பி படத்தில் நடித்தது தான் என அண்மையில் நம்பர் நடிகை பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த ராஜாங்க படத்தில் நடித்தது இரண்டாவது தவறு என எப்போது எந்த பேட்டியில் சொல்லப் போகிறாரோ என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Recommended Video

கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
கடந்த ஆண்டு அந்த நம்பர் நடிகை நடிப்பில் வெளியான அத்தனை படங்களில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது ஒரே ஒரு படம் மட்டும் தான். இந்நிலையில், இந்த ஆண்டு அந்த கடவுள் படம் தான் அவரை காப்பாற்ற வேண்டும் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











