சோஷியல் மீடியாவுக்கு திடீரென டாட்டா காட்டிய பிரபல நடிகை.. எல்லாத்துக்கும் காரணம் அவர் தானாம்!
சென்னை: ஒட்டுமொத்த இந்தியர்களையும் தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து வரும் அந்த பேபி நடிகை திடீரென சோஷியல் மீடியாவில் இருந்து டோட்டலாக ஒதுங்கி உள்ளார்.
கால் அழகியுடன் ஏற்பட்ட பனிப்போர் காரணமாக ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி சமூக வலைதளங்கள் முழுவதும் தனது போட்டோக்களை நிரப்பி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்து வந்தார் அந்த நடிகை.
ஆனால், அதற்கு சமமாக அவருக்கு ஏகப்பட்ட நெகட்டிவ் ட்ரோல்களும், ஆபாச மீம்களும் அதிகரித்து டென்ஷன் கொடுத்தன.

கடுப்பில் கத்தினார்
எல்லை மீறிய யூடியூப் சேனல்கள் மற்றும் ஃபேக் ஐடிக்களை எதிர்த்து ரொம்பவே கோபப்பட்டு வந்தார் அந்த நடிகை. அதன் காரணமாக சினிமாவில் அதிகளவு கான்சென்ட்ரேஷன் கூட தன்னால் பண்ண முடியவில்லை என தோழியும் நடிகையுமான ஒருவருடன் அவர் புலம்பிய நிலையில், அவர் கொடுத்த டிப்ஸ் காரணமாகத்தான் தற்போது இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

இருவரும் இணைந்து
சமீபத்தில், இருவரும் ஒன்றாக இணைந்து நடித்த படம் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் நல்ல வசூலை ஈட்டி ஹிட் அடித்தது. அந்த படத்திற்கு பிறகு அந்த நடிகையுடன் ரொம்பவே நட்பாக பழகி வருகிறாராம் இந்த விவாகரத்து நடிகை. ஃபாலோயர்களை அதிகரிக்க இவர் போட்ட ஆட்டம் இவருக்கே எதிராக திரும்பியதும் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார்.

கன்னாபின்னாவென கவர்ச்சி
திருமணத்துக்கு பிறகு பெரும்பாலும் சேலை மற்றும் சுடிதார் அணிந்து ஹோம்லி கேர்ளாக நடித்து வந்த அந்த பேபி நடிகை திடீரென விவாகரத்துக்கு பிறகு சில மோசமான விளம்பரங்களுக்காக ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டி போட்டோஷூட்களை நடத்தினார். ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகலாம் என நினைத்த அவருக்கு அதிகபட்சமாக கிடைத்தது ஆபாச ட்ரோல்களும் மார்ஃபிங் வீடியோக்களும் தானாம்.

நம்பர் நடிகை அட்வைஸ்
சோஷியல் மீடியாவில் ஏராளமான நெகட்டிவிட்டி தான் நிறைந்திருக்கிறது. அதை பார்த்தால், நாம் நம்முடைய வேலையை நமக்கு பிடித்ததை செய்ய முடியாது. நாம் நம் வாழ்க்கையை வாழ வேண்டும், அடுத்தவருக்காக வாழக் கூடாது என்றும் பலரது கருத்துக்களை கேட்க ஆரம்பித்தால், நம்மால் சந்தோஷமாக எதையும் செய்ய முடியாது என அவர் கொடுத்த அட்வைஸ் தான் காரணம் என தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ் நடிகரை போல
மாஸ் நடிகரை பாருங்க, எப்போவாவது தன்னுடைய படங்கள் வெளியாகும் அறிவிப்பை மட்டும் தான் சோஷியல் மீடியாவில் பகிர்கிறார். அப்படி உங்களது ஐடியையும் மாற்றி விடுங்கள். அப்புறம் பாருங்க டென்ஷன் இல்லாமல் லைஃப் ஜம்முன்னு இருக்கும் என்றும் நம்பர் நடிகை பேபி நடிகைக்கு அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











