»   »  சர்ச்சை நடிகையை திருமணத்துக்கு தூண்டிய உலக நாயகன்!

சர்ச்சை நடிகையை திருமணத்துக்கு தூண்டிய உலக நாயகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல் சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற பெரிய நம்பர் நடிகையுடன் இப்போது காதலில் கைகோர்த்திருப்பவர் ஒரு இளம் இயக்குநர் அல்லவா? இருவரும் திருமணம் செய்துகொள்ளாமலேயே லிவ் இன் டுகெதராக வாழ்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் உலக நாயகனும் அவரது லிவிங் டூகெதரும் பிரிந்தது நடிகைக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே விரைவில் திருமண அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். 'இன்னும் கொஞ்ச நாள் நடிக்கலாமே?' என்று இயக்குநர் யோசனையாக சொன்னதை பொருட்படுத்தவே இல்லையாம். அனேகமாக அடுத்த ஆண்டு மத்தியில் திருமணம் இருக்கலாம் என்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியிலேயே கூட அறிவிப்பு வரலாம்.

நடிகையை இன்னும் மேடம் என்றே அழைக்கும் இயக்குநருக்கு இப்போது நடிகைதான் எல்லாமும். இயக்குநர் என்ன ட்ரெஸ் போட வேண்டும் என்பது முதல் என்ன சாப்பிட வேண்டும் என்பது வரை பார்த்து பார்த்து கவனித்துக்கொள்கிறார். ஊரெல்லாம் இந்த ஜோடிமீதுதான் திருஷ்டி படுகிறதாம்.

English summary
Big number actress wants to marry her boy friend due to living relationship failure in top hero's life.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil