இடுப்பு சீன் கூட வரக்கூடாது.. இளம் இயக்குநருக்கு ஏகப்பட்ட கண்டிஷன் போட்ட நம்பர் நடிகையின் கணவர்?

By Staff

சென்னை: தனது மனைவி என்ன படங்களில் நடிக்க வேண்டும் என்றும் யாருடன் நடிக்க வேண்டும் என்றும் அவருக்கான காட்சிகள் எந்த லிமிட்டுக்குள் இருக்க வேண்டும் என்றெல்லாம் கணவர் இயக்குநர் லிஸ்ட் போட்டு படக்குழுவினரை டார்ச்சர் செய்து வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

அந்த பெரிய ஸ்டார் படத்திலேயே பிகினி காட்சிகள் வைக்க பிளான் பண்ண நிலையில், அத்தனைக்கும் கத்தரி போட்டதே கணவர் தான் என்கின்றனர்.

இந்நிலையில், நடிகையை வைத்து அடுத்து இயக்கப் போகும் அந்த இளம் இயக்குநருக்கு இப்பவே ஏகப்பட்ட கண்டிஷன்களை போட்டு டென்ஷன் ஆக்கி விட்டாராம் காதல் கணவர் என பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

அளவுக் கடந்த காதல்: அந்த நடிகையின் மீது அளவுக் கடந்த காதல் கொண்ட இயக்குநர் தனது காதலை மொத்தமாக வெளிப்படுத்திய நிலையில், ஏற்கனவே பிரேக்கப் செய்யப்பட்டு சோகத்தில் இருந்த நடிகை அவரது அரவணைப்பில் அப்படியே விழுந்து விட்டார். இருவருக்கும் திருமணமும் நடந்து குழந்தைகளுடன் வாழ்க்கை ஜம்முன்னு சென்று கொண்டிருக்கிறது.

Number actress husband warned young director with list of conditions

திருமணத்துக்கு பிறகு நடிகை சினிமாவில் இருந்து ஒதுங்கி விடுவார் என பல கிசுகிசுக்கள் கிளம்பினாலும், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து எப்போதுமே தான் நம்பர் ஒன் நடிகையாகவே இருப்பேன் என்பதை நிரூபித்து வருகிறார்.

கவர்ச்சி காட்சிகளுக்கு நோ: ஒரு காலத்தில் அந்த நடிகை காட்டாத கவர்ச்சியே இல்லை என இருந்து வந்த நிலையில், திருமணத்துக்கு பிறகு அதிகமாக கவர்ச்சி காட்டி நடிக்க வேண்டாம் என கணவர் விருப்பத்துக்கு ஏற்ப நடிகை ஹோம்லி லுக்கிலும் ஓரளவுக்கு மாடர்ன் லுக்கிலும் நடித்து வருகிறார்.

பெரிய ஸ்டார் படத்தில் நடிக்க அதீத கவர்ச்சி வைக்கலாமா என காப்பி இயக்குநர் கேட்டதற்கும் மொத்தமாக காதல் கணவர் நோ சொல்லி மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இளம் இயக்குநருக்கு டார்ச்சர்: இந்நிலையில், நம்பர் நடிகை அடுத்ததாக இளம் இயக்குநர் ஒருவர் இயக்கத்தில் தனது மைல்கல் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் அந்த இயக்குநரை தனியாக அழைத்துச் சென்று எப்படியெல்லாம் தனது மனைவிக்கு சீன் வைக்க வேண்டும், காஸ்ட்யூம் எப்படி இருக்க வேண்டும், நடிகர்களுடன் நெருக்கம் எப்படி இருக்க வேண்டும் என்பது வரை சொல்லி கிளாஸ் எடுத்து டார்ச்சர் செய்திருக்கிறார் என பேச்சுக்கள் புகைந்து வருகின்றன.

Number actress husband warned young director with list of conditions

அந்த இளம் இயக்குநரும் வேறு வழியில்லாமல் ஆமாம் சாமி போட்டு அவருக்கு முன்பே தலையை ஆட்டி விட்டு தற்போது செம கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகும் அளவுக்கு எழுதிய சில காட்சிகளை அசிஸ்டன்ட் டைரக்டர்களிடம் சொல்லி மாற்ற சொல்லி வருவதாக கூறுகின்றனர். காதல் கணவரின் இந்த டார்ச்சர் பற்றி தெரிந்து கொண்டு தான் டாப் நடிகர் இருவரும் வேண்டாம் சாமி என ஒதுக்கி விட்டாரா? என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

பல முன்னணி நடிகர்கள் முன்பு போல ஏன் அந்த நடிகையை ஹீரோயினாக ஆக்கவில்லை என்கிற கேள்விக்கும் இதுதான் விடை என்றே சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு என்று கோடம்பாக்கம் டீ கடைகளில் சிரிப்பு சத்தம் எதிரொலிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X