ஜாதகப் பொருத்தம் இருந்தா தான் ஓகே.. தொடர் தோல்விகளால் கதையை விட ஜோதிடத்தை நம்பும் பிரபல நடிகை!

ஜாதகம் மற்றும் ஜோசியத்தின் மீது தான் நம்பர் நடிகையின் முழு நம்பிக்கையும் இருக்கிறதாம்.

சென்னை: தொடர் தோல்விகளால் பிரபல நம்பர் நடிகை புதிய படங்களில் ஒப்பந்தமாக புதிய நம்பிக்கை ஒன்றைப் பின்பற்றத் தொடங்கி விட்டாராம்.

தொட்டதெல்லாம் துலங்கும் என்பார்களே.. ஒரு காலத்தில் இது நம்பர் நடிகைக்குத் தான் பொருத்தமாக இருந்தது. முன்னணி நடிகர்கள் படம், தனி நாயகி என நடிகை எந்தப் படத்தில் நடித்தாலும் அது வெற்றிக்கனியைத் தான் தந்தது.

இதனாலேயே நடிகையின் சம்பளமும் விர்ரென அதிகமானது. நடிகையின் கால்ஷீட்டுக்காக நடிகர்களும், இயக்குநர்களும் காத்திருக்கத் தொடங்கினர். நடிகையின் வீட்டு வாசலிலேயே தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர்.

தலைகீழான நிலைமை

தலைகீழான நிலைமை

ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். சமீபத்தில் அவர் நடித்த எந்த படமும் சரியாக ஓடவில்லை. இதனால் நடிகையின் மார்க்கெட் இறங்குமுகம் கண்டுள்ளது.

 சம்பள விஷயத்தில் கறார்

சம்பள விஷயத்தில் கறார்

இருப்பினும் சம்பள விஷயத்தில் நடிகை இன்னும் கறாராக தான் இருக்கிறார். சமீபத்தில் தனது சம்பளத்தை மேலும் உயர்த்தி தயாரிப்பாளர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே அக்கட தேசத்தில் நடிகைக்கு ரெட்கார்டு போட்டாகிவிட்டது.

கவலையில் நடிகை

கவலையில் நடிகை

இந்நிலையில் சம்பளத்தையும் உயர்த்தி இருப்பதால் தமிழிலும் நடிகையை கழட்டிவிட பெரிய ஹீரோக்களும், இயக்குனர்களும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் கடும் கவலையில் இருக்கும் நடிகை, கோயில் கோயிலாக சுற்றி வருகிறார்.

ஜோசியம்.. ஜாதகம்..

ஜோசியம்.. ஜாதகம்..

மேலும் பிரபல ஜோசியர்களை வரவழைத்து தனது ஜாதகத்தை காட்டி, சுப பலன்களை கேட்டறிந்து வருகிறாராம். ஜோசியர்கள் சொல்லும் பரிகாரங்களை எல்லாம் தட்டாமல் செய்கிறாராம். ஜோசியர்கள் சொல்லும்படி தான் நடந்து கொள்கிறாராம். அதனால் ஜோசியர்கள் ஜாதகத்தை பார்த்து கணித்த பிறகு தான் புதிய படங்களை ஒப்புக்கொள்கிறாராம்.

ஜோசியத்தில் நம்பிக்கை

ஜோசியத்தில் நம்பிக்கை

பல ஆண்டுகளாக டாப் நடிகையாக இருந்து வரும் அவருக்கு, மேலும் சில ஆண்டுகள் அதே இடத்தில் தொடர வேண்டும் என ஆசையாம். ஆனால் அதற்கு ஹீரோக்கள் மற்றும் இயக்குனர்களை மட்டும் நம்பினால் போதாது, ஜோசியத்தையும் நம்ப வேண்டும் என முடிவெடுத்ததன் எதிரொலிதான் இந்த கிரக பலன்கள் பார்ப்பது எல்லாம் என கிசுகிசுக்கிறது கோலிவுட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X