நம்பர் நடிகை கொடுத்த டார்ச்சர்.. கணவரோட நிலைமை இப்படி ஆகிடுச்சே.. அப்போ அந்த படம் அவ்ளோ தானா?

By Staff

சென்னை: டாப் நடிகரின் படத்தை தனது கணவருக்கு டீலிங் பேசி வாங்கிக் கொடுத்ததே அந்த நம்பர் நடிகை தான் என்கின்றனர். ஆனால், கடைசியில் அந்த நடிகை மட்டும் ஹீரோயினாக வேண்டாம் என நடிகர் தரப்பு கண்டிஷன் போட்ட நிலையில், இயக்குநர் மற்ற ஹீரோயின்களை பரிசீலனை செய்யத் தொடங்கினார்.

ஆனால், எப்படியாவது தானே அந்த படத்தில் நடித்து விட வேண்டும் என நினைத்த அந்த நம்பர் நடிகை கணவர் தேர்வு செய்யும் நடிகைகளை எல்லாம் வேண்டாம் என்று தவிர்த்து தேவையில்லாமல் நேரத்தை வீணடித்துள்ளார்.

இந்த விவகாரம் தயாரிப்பு தரப்புக்கு தெரிந்த நிலையில், அதிரடியாக இயக்குநரையே மாற்ற இருப்பதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

மொக்கை படுத்திய தொகுப்பாளர்

மொக்கை படுத்திய தொகுப்பாளர்

மாஸ் நடிகரின் படத்தை இயக்கும் இயக்குநரை பாராட்டியும் டாப் நடிகரின் அடுத்த படத்தை இயக்கப் போகும் காதல் இயக்குநரை சமீபத்தில் நடந்த பேட்டி நிகழ்ச்சியில் தொகுப்பாளரே மொக்கைப் படுத்திய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி ட்ரோல் மெட்டீரியல் ஆனது. நான் தான் சார் அடுத்த படத்தை பண்றேன், நம்புங்க என்கிற ரேஞ்சுக்கு அந்த இயக்குநர் பேசியிருந்த நிலையில், தற்போது அந்த இயக்குநர் அந்த படத்தை பண்ணுவாரா? மாட்டாரா? என்கிற நிலைமை ஏற்பட்டுள்ளது.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

அந்த இயக்குநர் ஏற்கனவே பிரைட் நடிகரை வைத்து படம் எடுக்கிறேன் என படுத்தி எடுத்ததை இன்னமும் ரசிகர்கள் மறக்காத நிலையில், டாப் நடிகரை இயக்கும் அளவுக்கு அவருக்கு ஸ்டஃப் இல்லை என ரசிகர்களே ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனாலும், தனக்கான சுதந்திரத்தை டாப் நடிகர் கொடுத்துள்ளார். என் விருப்பம் போல ஒரு நல்ல படத்தை தருவேன் என இயக்குநர் ரொம்பவே நம்பிக்கை தெரிவித்து இருந்தார்.

போட்டி மனப்பான்மை

போட்டி மனப்பான்மை

ஆனால், தற்போது டாப் நடிகரின் நிலைமையே வேறு என்றும் எப்படியாவது மாஸ் நடிகரை முந்தியே ஆக வேண்டும் என்கிற போட்டி மனப்பான்மைக்குள் சென்ற நிலையில் தான் கடந்த படத்தையே போட்டி ரிலீஸாக வெளியிட்டார் என்றும் அடுத்த படத்துடன் பெரிய போட்டி கொடுக்க இந்த இயக்குநர் வேண்டாம் என்கிற நிலைமைக்கு நடிகரே வந்து விட்டதாக கூறுகின்றனர்.

தயாரிப்பு தலையீடு

தயாரிப்பு தலையீடு

இந்த விவகாரத்தில் டாப் நடிகரை வைத்து பெரியளவில் வியாபாரத்தை செய்ய களமிறங்கி உள்ள தயாரிப்பு நிறுவனமும் இயக்குநர் மீது அதிருப்தி அடைந்தது தான் இந்த பிரச்சனை பூதாகரமாக மாற காரணம் என்கின்றனர். இதுதான் சாக்கு என புதிய படம் எதுவும் புக் செய்யாமல் இருந்து வந்த அந்த இயக்குநர் அதிரடியாக நடிகரை சந்தித்து ஒரு ஸ்க்ரிப்ட்டும் சொல்ல டாப் நடிகருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ரொம்பவே பிடித்துப் போய் விட்டதாம்.

நம்பர் நடிகை தான் காரணமா

நம்பர் நடிகை தான் காரணமா

இப்படியொரு நிலைமைக்கு அந்த இயக்குநர் தள்ளப்படுவதற்கான காரணமே நம்பர் நடிகை தான் என்றும் புதிய பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன. சொன்ன நேரத்திற்குள் நடிகருக்கு ஏற்ற நடிகையை ஒப்பந்தம் செய்யாமல் நம்பர் நடிகையின் டார்ச்சர் காரணமாக அடுத்தடுத்த ஹீரோயின்களை மாற்றிக் கொண்டே நேரத்தை வீணடித்த நிலையில் தான் நடிகரும் தயாரிப்பு தரப்பும் அதிரடியாக வேறு ஒரு இயக்குநரை களமிறக்க முடிவு கட்டி விட்டனர் என இண்டஸ்ட்ரியில் பெரும் பேச்சு அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X