நேஷனல் அவார்டுக்கான லாபி எங்கேயாவது கிடைக்குமா? வலைவீசும் நம்பர் ஒன்!
தமிழின் நம்பர் ஹீரோயினான நபர் நடிகைக்கு விருது ஆசை வந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறாராம்.
கமர்ஷியல் படங்களில் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஆட இனிமேல் முடியாது என்று புரிந்துகொண்ட ஹீரோயின் தனக்கு முக்கியத்துவம் கேரக்டர்களில் மட்டும் நடித்துவருகிறார்.

அப்படி அவர் ஆட்சியர் வேடத்தில் நடித்த படம் ஒன்று ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு எப்படியாவது தேசிய விருது வாங்கிவிட வேண்டும் என்பது அவரது கனவாக இருக்கிறதாம். இன்னும் எத்தனை படங்களில் நடிக்கப் போகிறோம் என்று தெரியாது. ஃபீல்டில் இருக்கும்போதே வாங்கிவிட வேண்டும் என்று திட்டமாம்.
'தேசிய விருதுலாம் வாங்கணும்னா டெல்லில லாபி பண்ணாத்தான் முடியும்' என்று யாரோ சொல்லிவிட அந்த லாபி எங்கே கிடைக்கும் என்று தேடிக் கொண்டிருக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications