மறுபடியும் அந்த உச்ச நடிகருடன் நம்பர் நடிகை நடிக்க இப்படி ஒரு டீல் போட்டுருக்காங்களாம்!
சென்னை: மாஸ் ஹீரோக்கள் படத்தில் நடித்து மார்க்கெட் காலியான நிலையில், மீண்டும் சோலோ ஹீரோயினாக களமிறங்கிய அந்த நம்பர் நடிகை சமீப காலமாக அதிக பணம் கிடைப்பதால், மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் அந்த உச்ச நடிகருடன் நடித்த படத்தில் டம்மியான ரோல் கொடுத்து ஓரங்கட்டப்பட்ட அந்த நம்பர் நடிகை மீண்டும், அதே நடிகரின் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளது கோலிவுட்டில் ஆச்சர்யத்தை கிளப்பியுள்ளது.

மிஸ் ஆனது
வரலாற்று படத்தில் நம்பர் நடிகையும், ஓவர் ஆக்டிங் நடிகையும் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உச்ச நடிகரின் படத்தில் இணைந்து நடிக்க போறாங்களாம். அந்த படத்துல எதிர்பார்த்த இந்த காம்பினேஷன் தற்போது இந்த கமர்ஷியல் படத்தில் ஒர்க்கவுட் ஆகி இருக்காம்.

நம்பிக்கை இல்லை
அந்த வரலாற்று படத்தை அந்த இயக்குநர் அந்த அளவுக்கு சிறப்பாக எடுக்க மாட்டார் என்றும், அவர் மீது பரி பூரண நம்பிக்கை இல்லாததும் தான் அந்த படத்தில் நடிக்க வந்த அழைப்பை இந்த இரண்டு நடிகைகளும் வேண்டாம் என உதாசீனப் படுத்த காரணமாம்.

திடீர் அறிவிப்பு
அடுத்த படத்தில் உச்ச நடிகருக்கு எக்ஸ்பையரியான நடிகைகள் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது வந்துள்ள திடீர் அறிவிப்பால் கோலிவுட்டே குழம்பி போயுள்ளது. அந்த உச்ச நடிகருக்கு படத்தில் யார் தான் நாயகி என்ற சந்தேக ட்விஸ்ட்டை கிளப்பவே அந்த மாஸ் இயக்குநர் இந்த வேலையை செய்துள்ளாராம்.

ஒரு கண்டிஷன்
மேலும், சமீபத்தில் அந்த உச்ச நடிகருடன் நடித்த நம்பர் நடிகைக்கு அந்த படத்தில் டம்மி ரோல் கொடுத்து பழைய பகையை அந்த இயக்குநர் தீர்த்துக் கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் அந்த இயக்குநரின் இயக்கத்தில் வெளியான ஹிட் படத்தில் நல்ல ரோல் கொடுக்கப் பட்டதை போன்று ரோல் இருந்தால் சொல்லுங்க நடிக்கிறேன் என கண்டிஷன் போட்டுள்ளாராம்.

டீல் ஓகே
மேடம் உங்க கேரக்டர் எனக்கு தெரியாதா, உங்களுக்கு ஏத்த கெத்தான ரோல் தான் இந்த கதையில் வச்சிருக்கேன், தைரியமா வந்து நடியுங்க என அந்த இயக்குநர் நம்பிக்கை கொடுக்கவே அந்த நடிகை பழைய ஹிட் பாசத்தால் உடனடியாக ஓகே சொல்லி இருக்கிறாராம்.

யாருக்கு முக்கியத்துவம்
நம்பர் நடிகை இந்த படத்தில் களம் இறங்கி உள்ளதால், மொத்த கவனமும் இவர் பக்கம் திரும்பி உள்ளது. மேலும், அந்த ஓவர் சீன் நடிகை உச்ச நடிகருக்கு நாயகி இல்லை என்ற தகவல் கசிந்த நிலையில், தற்போது தனக்கு முக்கியத்துவம் இல்லையா? என்று அவரும் அந்த இயக்குநரிடம் வம்படியாக கேட்டு வருகிறாராம்.

தலை பிய்த்துக் கொண்டு
இதனால், அந்த இயக்குநர் தலையை பிய்த்துக் கொண்டு புலம்பி வருகிறாராம். இந்த விஷயம் அறிந்த அந்த உச்ச நடிகர் அதெல்லாம் கவலை படாதீங்க, நீங்க படப் பிடிப்பு வேலையில கவனத்தை செலுத்துங்க, கொஞ்சம் நாள்ல இந்த பிரச்சனை சரியா போயிடும் என ஆறுதல் கூற, உத்வேகத்துடன் ஷூட்டிங் பணிகளை கவனித்து வருகிறாராம் இயக்குநர்.


Click it and Unblock the Notifications











