டாப் நடிகரை ஏமாற்ற நம்பர் நடிகை வைத்த சக்சஸ் பார்ட்டி.. ஒரே வாரத்தில் சாயம் இப்படி வெளுத்துடுச்சே!

By Staff

சென்னை: காதலர் இயக்கிய படம் சொதப்பிவிடும் என தெரிந்தே படம் வெளியான உடனே பரபரப்பாக நம்பர் நடிகை சக்சஸ் பார்ட்டி வைக்க அதுதான் காரணம் என்கின்றனர்.

காதலருக்கு காஸ்ட்லி கார் எல்லாம் வாங்கிக் கொடுத்து ஒரே வாரத்தில் படம் ஹிட் என அனைவரையும் நம்ப வைத்து விட்டார்.

ஆனால், அதற்கு பின்னணியில் அந்த டாப் நடிகர் படம் தான் இருந்ததாக பேச்சுக்கள் அடிபடத் தொடங்கி உள்ளன.

தப்பான படம்

தப்பான படம்

நம்பர் நடிகை நடிப்பில் சமீபத்தில் வெளியான அந்த ரெண்டு லட்டு திரைப்படத்தின் கதையை பலரும் கழுவி ஊற்றி விட்டனர். குடும்பத்துடன் படத்தை பார்க்கவே முடியவில்லை என்றும், இளைஞர்களையும் பெண்களையும் இந்த படம் ரொம்பவே கெடுத்து விடும் என பொதுமக்கள் முதல் விமர்சகர்கள் வரை விளாசித் தள்ளி விட்டனர்.

அவரே எதிர்பார்க்கவில்லை

அவரே எதிர்பார்க்கவில்லை

படத்திற்கு நிச்சயம் பெரிய எதிர்பார்ப்பு இருக்காது என எந்தவொரு புரமோஷனுக்கும் தேவையில்லாமல் நம்பர் நடிகை செலவு செய்யவே இல்லை. ஆனால், படம் வெளியானதும் சமத்து நடிகையின் தயவால் இளைஞர்கள் மத்தியில் படம் சூடுபிடிக்கத் தொடங்கியதை பார்த்ததுமே ரொம்பவே ஹேப்பி ஆன இவர், இதுதான் சான்ஸ் என உடனடியாக சக்சஸ் பார்ட்டியையும் வைத்து விட்டார்.

சக்சஸ் பார்ட்டி

சக்சஸ் பார்ட்டி

ஒரு படத்தில் நடித்து முடித்த பிறகு அந்த படம் ஓடுகிறதா? தோல்வியை தழுவுகிறதா? என எதையுமே கண்டுக்காமல் அடுத்த படத்தை நோக்கி நகரும் நம்பர் நடிகை தியேட்டருக்கு எல்லாம் சென்று படத்தை பார்த்து சக்சஸ் பார்ட்டி வைத்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. படமும் வெற்றி என்றே பலரும் நினைக்கத் தொடங்கினர்.

காத்துவாங்கிய தியேட்டர்கள்

காத்துவாங்கிய தியேட்டர்கள்

ஆனால், அடுத்த வாரமே அந்த படத்தின் உண்மையான சாயம் வெளுத்து விட்ட நிலையில், தியேட்டர்கள் அனைத்துமே காத்து வாங்கத் தொடங்கின. மேலும், அடுத்தடுத்த புதிய படங்களின் வரவால் அந்த படத்தின் ஓட்டம் முற்றிலுமாக அதற்குள் நின்று போய் விட்டது. இப்படி நடக்கப் போவதை அறிந்து தான் முன் கூட்டியே அப்படியொரு விஷயத்தை நடிகை செய்ய இன்னொரு காரணமும் உள்ளதாக கூறுகின்றனர்.

தலையில் மசாலா தடவ

தலையில் மசாலா தடவ

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக டாப் நடிகரை சம்மதிக்க செய்ததும் படம் வெளியானதும் சக்சஸ் பார்ட்டி வைத்ததும் நம்பர் நடிகையின் ராஜ தந்திரம் தான் என்கின்றனர். தனது காதலர் எப்படியாவது அந்த படத்தை இயக்க வைத்து விட வேண்டும் என்பதால், டாப் நடிகரின் தலையில் நடிகை நல்லாவே மசாலா தடவி விட்டார் எனக் கூறுகின்றனர்.

பின் வாங்க மாட்டார்

பின் வாங்க மாட்டார்

முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கும் அந்த டாப் நடிகருக்கு கிடையாது என்பதால், படத்தின் ரிசல்ட் தெரிந்த பிறகும் கூட அவர் மாற மாட்டார் என்பதில் நம்பர் நடிகை உறுதியாக உள்ளார். கிடைத்த வாய்ப்பை தவற விட்டு விடாதே சரியா பண்ணி ஜெயிச்சிடு என தனது காதலருக்கும் அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X