கிங் நடிகர் படத்தில் இருந்து நீக்கப்படும் நம்பர் நடிகை? அப்டேட் கூட வராததுக்கு காரணம் இதானாம்!
சென்னை: கிங் நடிகர் படத்தில் இருந்து நம்பர் நடிகை நீக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருப்பவர் அந்த நம்பர் நடிகை. ஸ்டார் நடிகர் முதல் முன்னணி இளம் நடிகர்கள் வரை பலருடன் ஜோடி போட்டு வருகிறார் நடிகை.
காதல் பஞ்சாயத்துகளுக்கும் பெயர் போன அந்த நடிகை, தற்போது இளம் இயக்குநருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

கல்யாண பேச்சை எடுத்தால் காதம்பரி
6 வருடங்களாக இயக்குநருடன் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் அவர், திருமணம் என்ற பேச்சை எடுத்தால் மட்டும் காதம்பரியாகி விடுகிறாராம். சமீபத்தில் தான் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது என்ற தகவலை கூறியுள்ளார் நடிகை.

பணமே குறி என்றிருக்கும் நடிகை
இது சற்று காதல் இயக்குநருக்கு நிம்மதியை கொடுத்தாலும் திருமணத்திற்கு காதே கொடுக்காத நடிகையால் சற்று அப்செட்டிலும் உள்ளாராம். பணமே குறி என்றிருக்கும் நடிகை சமீபத்தில் தனக்கு முக்கியத்துவம் தரும் கதையில் தான் நடிப்பேன் என அடம்பிடித்தார்.

கிடைக்கும் போதே கல்லாக்கட்டி கொள்வோம்
ஆனால் அதுபோன்ற கதைகள் நடிகைக்கு அவ்வளவாக கிடைக்கவில்லையாம். இதனால் வாய்ப்பு கிடைக்கும் போதே கல்லாக்கட்டி கொள்வோம் என வரும் வாய்ப்பையெல்லாம் வளைத்து போட்டு வருகிறாராம். அப்படிதான் வட நாட்டு கிங் நடிகர் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வந்தாராம் நடிகை.

கமிட் செய்யலாமா வேண்டாமா?
ஆனால் கிங் நடிகரோ சற்று யோசனையில் உள்ளாராம். கிங் நடிகர் படத்தில் நடிக்க வட நாட்டு நடிகைகள் பலரும் போட்டி போட்டு வருகிறார்களாம். இதேபோல் அக்கட தேசத்து நடிகை ஒருவரும் பாலிவுட்டில் நடிக்க தீவிரம் காட்டி வருகிறாராம். இதனால் நம்பர் நடிகையை கமிட் செய்யலாமா வேண்டாமா என்ற யோசனையில் உள்ளாராம் நடிகர்.

விரைவில் வெளியாகும் தகவல்
கிங் நடிகர் இன்னும் பிடி கொடுத்து பேசாமல் இருப்பதால்தான் படம் குறித்த அப்டேட் எதுவுமே வெளியாகவில்லையாம். ஆனால் கிங் நடிகர் படத்தில் நடிக்க போகும் அந்த குயின் நடிகை யார் என்பது குறித்த தகவலும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என்கிறார்கள் இயக்குநருக்கு நெருக்கமானவர்கள்.


Click it and Unblock the Notifications











