»   »  காதலருக்காக டப்பிங் பேசிய நம்பர் நடிகை

காதலருக்காக டப்பிங் பேசிய நம்பர் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரை தான் நடித்த எந்தப் படங்களுக்கும் சொந்தக்குரலில் டப்பிங் பேசாத நம்பர் நடிகை, முதன்முறையாக ரவுடியான அந்தப் படத்திற்கு சொந்தமாக குரல் கொடுத்திருக்கிறார்.

இதனைக் கேள்விப்பட்ட கோலிவுட்டினர் என்னது நம்பர் நடிகை சொந்தக்குரலில் பேசினாரா என்று ஆச்சரியப்படுகின்றனர். என்ன இந்த திடீர் மாற்றம் என்று விசாரித்தால் எல்லாம் காதல் செய்யும் மாயம் என்று கூறுகின்றனர்.

காதலரான அந்த சிவமான இயக்குனரின் வற்புறுத்தலால் தான் தனது சொந்தக்குரலில் பேசினாராம் நடிகை. ஆனால் நடிகையே ஆச்சரியப்படும் விதமாக இவரது குரல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

குறிப்பாக நடிகை படத்தில் பேசிய வசனங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறதாம், இதனால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் சொந்தக் குரலில் பேச முடிவு செய்திருக்கிறார் நடிகை.

படத்திற்கு இலவச விளம்பரமாக மாறிய இந்த விஷயம் மற்ற திரையுலகினருக்கும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறதாம். எப்படி என்றால் இனி இவர் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் செலவு மிச்சம்தான் என்றும் சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனராம்.

English summary
Number Actress using her own Voice in Recent movie, Actress Boyfriend requested her and she giving own voice in this movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil