வர நடிகைகளை எல்லாம் அவாய்டு பண்ணும் நம்பர் நடிகை.. டாப் நடிகருடன் ஜோடி போட பக்கா பிளானா?

By Staff

சென்னை: மாஸ் நடிகருடன் ஜோடி போட்ட சின்ன நம்பர் நடிகையை ஜோடியாக்கலாம் என டாப் நடிகர் தரப்பு சொல்ல இயக்குநரும் கிட்டத்தட்ட ஓகே சொல்லி விட்டாராம். ஆனால், அந்த போட்டி நடிகை வேண்டவே வேண்டாம் என சொல்லி ஒதுக்கி விட்டாராம்.

அடுத்து சில நடிகைகளையும் நடிகர் தரப்பில் இருந்து சிபாரிசு செய்து வருகின்றனர். ஆனால், வர நடிகைகளை எல்லாம் அவாய்டு செய்து விட்டு தானே நடிக்கலாம் என்கிற பலே திட்டத்துடன் நம்பர் நடிகை செயல்பட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனால், டாப் நடிகர் தரப்பு நம்பர் நடிகை இந்த முறை வேண்டாம் என்றே கூறி வருவதால் நடிகையை தேர்வு செய்வதிலேயே இயக்குநர் ரொம்ப குழம்பி போயுள்ளதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

கோலிவுட்டில் இடமில்லை

கோலிவுட்டில் இடமில்லை

கோலிவுட்டில் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்த அந்த நம்பர் நடிகைக்கு சமீப காலமாக கோலிவுட்டில் எந்தவொரு முன்னணி நடிகருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகளே அமையவில்லை. டோலிவுட் ஹீரோயின்களையும், பாலிவுட் ஹீரோயின்களையும் பெரிய நடிகர்கள் களமிறக்கி வரும் நிலையில், ஹீரோயின் சப்ஜெக்ட் படங்களிலேயே நடித்து வருகிறார்.

மத்த ஸ்டேட்டில் மாஸ்

மத்த ஸ்டேட்டில் மாஸ்

ஆனால், அதே சமயம் மற்ற மாநிலங்களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தொடர்ந்து நடித்து மாஸ் காட்டி வருகிறார் நம்பர் நடிகை. திருமணம் ஆன நிலையில், நடிகையுடன் ரொம்ப ரொமான்டிக்காக நடிக்க நடிகர்கள் கூச்சப்படுவதே இந்த நிலைமைக்கு காரணம் என்கின்றனர்.

கணவர் இயக்கத்தில்

கணவர் இயக்கத்தில்

அடுத்து கணவர் இயக்கத்தில் டாப் நடிகர் நடிக்க உள்ள படத்தில் நாம் தான் ஹீரோயின் என நடிகை நினைத்துக் கொண்டிருந்த நிலையில், நடிகரின் தரப்பில் இருந்து இந்த நடிகை வேண்டாம், வேறு யாராவது நடிகையை இந்த முறை நடிக்க வைக்கலாம் என நடிகர் விருப்பப்படுவதாக கூறியுள்ளனர்.

சின்ன நம்பர் நடிகை

சின்ன நம்பர் நடிகை

நடிகைக்கு முன்பாகவே திரையுலகில் நுழைந்து இன்று வரை நடிகைக்கு டஃப் போட்டியாக உள்ள அந்த சின்ன நம்பர் நடிகையை இந்த முறை நடிகருக்கு ஜோடியாக ஆக்கலாம் என்கிற பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், அவர் மட்டும் வேண்டாம் என நம்பர் நடிகை பிடிவாதமாக இருந்து அந்த கூட்டணியை தகர்த்து விட்டார் என்கின்றனர்.

அந்த அழகி

அந்த அழகி

டாப் நடிகருக்கு தொடர்ந்து பாலிவுட் நடிகைகள் மற்றும் கேரளத்து நடிகைகள் ஹீரோயினாக மாறி வரும் நிலையில், அந்த அழகி நடிகையை புக் செய்யலாம் சமீபத்தில் வந்த பிரம்மாண்ட படத்திலும் அவர் மாஸ் காட்டியிருந்தாரே என இயக்குநரே அந்த நடிகையை புக் செய்ய நினைக்க அதற்கும் நம்பர் நடிகை முட்டுக்கட்டை போட்டு விட்டார் என்கின்றனர்.

அவார்டு நடிகை

அவார்டு நடிகை

இருவரும் மிஸ் ஆன நிலையில், கடைசியாக ஏற்கனவே பிரைட் நடிகரை வைத்து இயக்குநர் இயக்கிய படத்தில் அந்த அவார்டு நடிகை நடித்திருந்தார். அவரையே இந்த முறை புக் செய்து விடலாம் என நினைத்து வந்த நிலையில், எப்படியாவது இந்த படத்தில் தானே நடித்து விட வேண்டும் என நடிகை கணவரை போட்டு டார்ச்சர் செய்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

குழப்பத்தில் இயக்குநர்

குழப்பத்தில் இயக்குநர்

இதனால் டாப் நடிகருக்கு ஜோடியாக எந்த நடிகையை புக் செய்யலாம் என்கிற குழப்பத்தில் இயக்குநர் இருந்து வருவதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன. பாட்டு நடிகையையும் புக் செய்யலாமா என கடைசி வரை நடிகர் தரப்பு நம்பர் நடிகையை அவாய்டு செய்து வரும் நிலையில் படத்தை சீக்கிரம் துவங்க என்ன வழி இருக்கிறது என இயக்குநர் ஆழ்ந்த யோசனையில் உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X