மும்பையில் செட்டிலாக நம்பர் நடிகை திட்டம்?.. ஒல்லி நடிகருடன் ஏற்பட்ட மோதல்.. அதுதான் காரணமா?

By Staff

சென்னை: சினிமா இண்டஸ்ட்ரி எப்போதுமே ஆணாதிக்கம் நிறைந்த ஒன்றாகவே இருப்பதால் தான் நடிகைகள் தங்களுக்கு எந்தவொரு பிரச்சனை நேர்ந்தாலும் போல்டாக வெளியே வந்து சொல்லாமல் அமைதியாகவே செல்கின்றனர். ஆனால், இந்தமுறை நம்பர் நடிகை வெடித்துச் சிதறிய நிலையில், அவருக்கு அதற்கான பின் விளைவுகள் அதிகம் வரும் என்பதையும் நன்றாகவே புரிந்துக் வைத்துக் கொண்டு தான் இறங்கி அடித்துள்ளார் என்கின்றனர்.

ஏற்கனவே நடிகைக்கு கம்பேக் கொடுத்த அந்த இயக்குநரின் உதவியால் இந்தி படத்தில் நடித்த நம்பர் நடிகை தொடர்ந்து அங்கேயே பல படங்களை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன.

gossip kollywood actress gossip

தனது குடும்பத்துடன் மும்பைக்கே சென்று செட்டில் ஆகிவிடலாம் என்றும் நம்பர் நடிகை முடிவு செய்திருப்பதாகவும் பேச்சுக்கள் கோடம்பாக்கத்தில் ஹெவியாக கிளம்பி வருகின்றன.

ஒல்லி நடிகர் கொடுத்த டார்ச்சர்: நம்பர் நடிகை வெளிப்படையாக ஒல்லி நடிகரின் டார்ச்சரை சொன்ன நிலையில், பல நடிகைகளும் அந்த நடிகர் மீது தங்களுக்குள் இருந்த கோபத்தை கொப்பளித்து தள்ளியுள்ளனர். நடிகரின் பெயரை முடிந்தவரை டேமேஜ் செய்துவிட்டு தான் இந்த இண்டஸ்ட்ரியை விட்டுக் கிளம்ப வேண்டும் என்கிற முடிவோடு தான் நம்பர் நடிகை அப்படியொரு அடி கொடுத்துள்ளார் என்றும் பகீர் தகவல்கள் கசிந்துள்ளன.

மும்பையில் செட்டில்: கோலிவுட்டில் ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக இணைந்து நடிக்கும் வாய்ப்பு நடிகைக்கு குறைய காரணமே ஒல்லி நடிகரின் குடைச்சல் தான் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், மும்பைக்கே சென்று செட்டில் ஆகி அங்கேயே பல படங்களை கமிட் செய்து நடிக்கவும் தனது பிசினஸை பெரிதாக்கவும் நம்பர் நடிகை முடிவு செய்துவிட்டார் என்றும் ஷாக்கிங் பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

கணவருக்கும் கஷ்டம்: தனக்கு எந்தவொரு கஷ்டம் என்றால் கூட தாங்கிக் கொள்ளும் மன தைரியம் உடைய நம்பர் நடிகைக்கு தனது கணவருக்கு கஷ்டம் வந்தால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார். காப்பி இயக்குநரின் பேனரில் புதிதாக படங்கள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், கணவர் இயக்கும் படம் ஒன்றையும் தயாரிக்க முடியுமா? என்கிற கோரிக்கையையும் நடிகை வைக்க தாராளமா பண்ணலாம் என க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மற்ற மொழிகளில் கவனம்: மும்பைக்கு சென்று பாலிவுட் படங்களில் மட்டும் நடிக்காமல் இந்தியா முழுவதும் மற்ற மாநிலங்களிலும் நிறைய படங்களில் நடிக்க பெரிய கவனத்தை செலுத்தி வருகிறாராம். கிளாமர் தூக்கலாக மீண்டும் நடிக்கவே பல போட்டோஷூட்களையும் அவர் நடத்தி வருகிறார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X