பிளான் பண்ணி பண்ண பிரேக் – அப் டிராமா.. எல்லாம் எதற்காகத் தெரியுமா?

சென்னை: நம்பர் நடிகைக்கும் அந்த ரெளடி இயக்குநருக்கும் இடையே பிரேக் ஆகி விட்டதாக சில நாட்களுக்கு முன்பு அனைத்து மீடியாக்களும் பரபரத்தன.

ஆனால், அது எல்லாமே அவங்க ரெண்டு பேரும் பிளான் பண்ணி பண்ண டிராமாதானாம்.

விரைவில் வெளியாகவுள்ள அந்த உச்ச நடிகரின் படத்திற்கான மறைமுக புரொமோஷன் தானாம் இந்த பிரேக் - அப் டிராமா என கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

நியூ இயரில் மட்டும்

நியூ இயரில் மட்டும்

கடந்த ஆண்டு பல சிறப்பு விடுமுறை கொண்டாட்டங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்த நிலையில், புத்தாண்டில் மட்டும் அந்த நம்பர் நடிகை தனியாக இருக்கும் புகைப்படம் வெளியானது தான் மீடியாக்களுக்கு தீனியாக அமைந்தது.

ஒர்க்கவுட் ஆன பிளான்

ஒர்க்கவுட் ஆன பிளான்

ஆனால், அந்த நம்பர் நடிகை போட்ட மாஸ்டர் பிளான் சரியான முறையில் ஒர்க்கவுட் ஆகியுள்ளது. இருவரும் பிரிந்து விட்டார்கள் என்ற செய்தி வெளியானால், மீடியாக்களில் அந்த நம்பர் நடிகை பற்றிய பேச்சுக்கள் வைரலாகும் என்ற நோக்கத்திலேயே இந்த டிராமா நடந்தேறியதாம்.

எல்லாம் எதற்காக?

எல்லாம் எதற்காக?

விரைவில் ரிலீசாகவுள்ள அந்த உச்ச நடிகரின் படத்திற்கான மறைமுக புரொமோஷனுக்காகத் தான் இந்த பிரேக் - அப் டிராமா போடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அந்த உச்ச நடிகர் படம் வெளியாகும் போது, தன்னை யாரும் கண்டு கொள்ளாததால், அந்த நம்பர் நடிகை போட்ட மாஸ்டர் பிளான் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும் சிலர் பேசிக் கொள்கின்றனர்.

ஏற்கனவே

ஏற்கனவே

அந்த காப்பி இயக்குநர் படத்திற்கும் இதுபோன்று, அந்த நம்பர் நடிகைக்கும் அந்த படத்தின் நடிகருக்கும் திருமணம் என கிளப்பிவிட்டு போஸ்டர்கள் ரிலீஸ் செய்து வேற லெவலில் விளம்பரம் செய்திருந்தனர். தற்போது, இதுபோன்ற புதிய யுக்தியை படத்தின் புரொமோஷனுக்காக பயன்படுத்தி உள்ளாராம் அந்த பிரபல நடிகை.

நெகட்டிவ் புரொமோஷன்

நெகட்டிவ் புரொமோஷன்

இப்போதெல்லாம் புதிய படங்களுக்கு வெளிப்படையான விளம்பரங்களை விட மறைமுகமான நெகட்டிவ் புரொமோஷன்கள் தான் அதிகம் பரவி அந்த படத்திற்கான நல்ல புரொமோஷனை தேடி தருகிறது. பிரபல நடிகர்களின் புகைப்படங்கள், போஸ்டர்கள், ஷூட்டிங் வீடியோக்கள் என பலவும் திட்டமிட்டே லீக் செய்யப்படுவதும் இந்த புரொமோஷனை பேஸ் பண்ணித்தான் என கோலிவுட்டில் பேசிக் கொள்கின்றனர்.

எப்படி வைரலாகிறது?

எப்படி வைரலாகிறது?

அந்த நம்பர் நடிகை சோஷியல் மீடியாக்களில் இல்லை என்றாலும், எப்படி அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்ற டவுட்டும் நெட்டிசன்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் தான் காரணம்

இயக்குநர் தான் காரணம்

அந்த ரெளடி இயக்குநர் தனது சோஷியல் மீடியா பக்கங்களில் நம்பர் நடிகையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவதே, அந்த நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக காரணமாம்.

ஃபேக் ஐடி

ஃபேக் ஐடி

மேலும், ஃபேக் ஐடிக்கள் மூலமாகவும் அந்த நம்பர் நடிகையின் பிரத்யேக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கசிந்து வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X