அந்த சலுகையெல்லாம் அவருக்கு மட்டும் தான்... நம்பர் நடிகை கறார்!
புதிய படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்கிறாராம் நம்பர் நடிகை.
Recommended Video

சென்னை: கோட் சூட் நடிகர் படத்தில் மட்டும் தாராளமாக நடித்துள்ளாராம் பெரிய நம்பர் நடிகை.
வயதாகி விட்டது, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி விடுவார் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவர் நம்பர் நடிகை. ஆனால், அழகு பொம்மையாக நடித்து வந்தவர், அதிரடியாக தனது ரூட்டை மாற்றி தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களம் கொண்ட நல்ல படங்களாகத் தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றிப்படங்களாக அமைந்து விடுகிறது. இதனால் நாளுக்கு நாள் அவரது சம்பளமும் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கோட் சூட் நடிகருக்காக மீண்டும் அவரது படத்தில் நாயகியாக நடிக்க சம்மதித்தார் நடிகை. நடிகரும், நடிகையின் நிலையை உணர்ந்து அவரது கதாபாத்திரத்தை கனமாக்கியது எல்லாம் ஊரறிந்த விசயம். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடித்தது போல், மீண்டும் கொஞ்சம் தாராளம் காட்டி நடித்துள்ளாராம் நடிகை.
இதனால் புதிய படங்களுக்காக அவரை அணுகுபவர்கள் எல்லாம் தங்களது படத்திலும் அவர் அதேமாதிரி நடிப்பாரா எனக் கேட்கிறார்களாம். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்பதால், தங்களது கோரிக்கையை ஏற்றுக் கொள்வார் என்பது அவர்களது எண்ணம். ஆனால், இந்த தாராளம் எல்லாம் அந்த நடிகரின் படத்திற்கு மட்டும் எனக் கறாராகக் கூறிவிட்டாராம் நடிகை.


Click it and Unblock the Notifications











