இனிமே அதுக்கு ’யெஸ்’ சொல்ல மாட்டேன்.. திடீரென மனதை மாற்றிய நம்பர் நடிகை.. என்ன காரணம்?

சென்னை: இனிமேலும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு நம்பர் நடிகை வந்துள்ளதாக பரபரப்பான பேச்சு ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் அடிபட்டு வருகிறது.

பல வருடங்களாக தமிழ் சினிமாவில் தனது இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் முன்னணியில் இருந்து வருகிறார் அந்த நம்பர் நடிகை.

சமீபத்தில் அவருக்கும் அவரது காதலருக்கும் மோதிரம் மாற்றிக் கொண்டு திருமணமே ஆகிவிட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டன.

நம்பர் நடிகை

நம்பர் நடிகை

பக்கத்து ஸ்டேட்டில் இருந்து கோலிவுட்டுக்கு பார்சலானவர் தான் இவரும். ஆனால், தொடர்ந்து தனது நடிப்புத் திறமையால் டோட்டல் சவுத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். கமர்ஷியல் படங்களிலும் உமன் சென்ட்ரிக் படங்களிலும் கெத்துக் காட்டி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார்.

காதல் சர்ச்சைகள்

காதல் சர்ச்சைகள்

விரல் நடிகரை காதலித்து வந்த நம்பர் நடிகை அவருடன் பிரேக்கப் செய்து கொண்டு பிரிந்த நிலையில், அடுத்ததாக டான்ஸ் நடிகருடனும் காதல் மற்றும் திருமண சர்ச்சைகளில் சிக்கினார். முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த அவர், காதல் சர்ச்சைகள் காரணமாக சினிமாவில் இருந்து சில காலங்கள் ஒதுங்கினார்.

செகண்ட் இன்னிங்ஸ்

செகண்ட் இன்னிங்ஸ்

மீண்டும் நடிக்க வந்த அவருக்கு பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு ஆரம்பத்தில் மறுக்கப்பட்டது. இளம் ஹீரோக்களுடன் அவர் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன. தனக்கு ஏற்பட்ட பல தடைகளை தானே உடைக்கும் விதமாக ஹீரோ இல்லாத ஹீரோயின் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வெற்றிகளை குவித்தார்.

தேடி வந்த வாய்ப்புகள்

தேடி வந்த வாய்ப்புகள்

மீண்டும் அவரது இமேஜ் உயர்ந்தவுடன் வேண்டாம் என ஒதுக்கிய பல முன்னணி ஹீரோக்களும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் அவரை நாயகியாக ஒப்பந்தம் செய்தனர். ஆனாலும், இந்த நிலை எப்போது வேண்டும் என்றாலும் மாறலாம் என்று நினைத்த அவர் தொடர்ந்து உமன் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார்.

திடீர் முடிவு

திடீர் முடிவு

சில படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், புதிதாக எந்தவொரு படத்திலும் எந்தவொரு ஹீரோவுக்கும் ஜோடி போட்டு இனிமேல் நடிக்கப் போவதில்லை என்கிற அதிரடி முடிவை திடீரென அந்த நடிகை எடுத்துள்ளதாக கோடம்பாக்கம் ஏரியா முழுவதும் தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

அவரு சொன்னாரா

அவரு சொன்னாரா

நல்ல மார்க்கெட் உடன் செம மாஸாகத்தானே நடித்துக் கொண்டிருக்கிறார். திடீரென இப்படி ஒரு முடிவை எடுக்கக் காரணம் என்ன என சமூக வலைதளங்கள் முழுவதும் ஒரே பேச்சாக எழுந்துள்ளது. ஒருவேளை காதலரின் கோரிக்கையாக இருக்குமோ? என்றும் கிசுகிசுத்து வருகின்றனர்.

தனி ரூட்

தனி ரூட்

ஹீரோக்களுடன் ஜோடி போட்டு டூயட் பாடி ஆடி நடிப்பதை விட தனக்கு பிடித்தமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தனது இஷ்டத்துக்கு தேர்வு செய்து இனி நடிக்கலாம் என்கிற மனநிலைக்கு அவர் வந்துள்ளது தான் காரணம் என்றும் பெரிய ஹீரோக்கள் படங்களில் தனக்கான கதாபாத்திரங்கள் வலுவாக வடிவமைக்கப்படுவதில்லை என்கிற ஆதங்கமே இப்படியொரு மனமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. என்ன ஆனாலும் நடிப்பை விடமாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளாராம், ரசிகர்களுக்கு அது போதும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X