“இப்டி பண்ணினா எப்டி”.. நம்பர் நடிகை மீது கோபத்தில் இருக்கும் சக நடிகைகள்!
நம்பர் நடிகை மீண்டும் டூயட் பாட ஆரம்பித்திருப்பது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: தனிநாயகியாக நடித்து வெற்றிப் படம் கொடுத்து வரும் பெரிய நம்பர் நடிகை, சமீபகாலமாக பல முன்னணி நாயகர்களுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கத் தொடங்கியுள்ளார். இதனால் தங்களது பட வாய்ப்பு பறிபோன கோபத்தில் அவர் மீது சக நடிகைகள் பலர் கோபத்தில் இருக்கின்றனராம்.
தமிழின் முன்னணி நடிகையாக நீண்ட வருடங்களாக இருப்பவர் நம்பர் நடிகை. அவ்வப்போது காதல் சர்ச்சைகளில் சிக்கினாலும், அது தன் தொழில் வளர்ச்சியைப் பாதிக்காதவாறு சாமர்த்தியமாக சமாளித்து வருகிறார்.
சமீபகாலமாக மற்ற நடிகர்களுடன் ஜோடி சேர்வதை தவிர்த்து வந்தார் நடிகை. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். அப்படங்களும் வெற்றி பெற்றதால் தொடர்ந்து, அதே போன்ற கதைகளோடு நாயகியை அணுகி வந்தனர்.

புதிய படங்கள் ஒப்பந்தம் :
இந்நிலையில், கோட் நடிகருக்காக தனது விதிமுறையை சற்று தளர்த்திக் கொண்டார் நடிகை. தனது காதலருக்கு நடிகரின் கால்ஷீட்டை வாங்கித் தருவதற்காகவே அவர் இப்படி நடந்து கொள்வதாக பேசப்பட்டது. ஆனால், அடுத்த அதிரடியாக வேறொரு முன்னணி நடிகரின் படத்திலும் நடிக்க சம்மதித்தார்.

சக நடிகைகள் கோபம்:
அதன் தொடர்ச்சியாக தற்போது இன்னொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். இப்படியாக தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிகை ஜோடி சேர்வது பல நடிகைகளின் காதுகளில் புகையை வரவழைத்துள்ளது.

முயற்சி:
நடிகை தனி டிராக்கில் தனி நாயகியாக நடித்து வந்ததால், வாரிசு நடிகை, வெடுக் வெடுக் இடுப்பழகி போன்றோர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க முயற்சித்து வந்தனர். எப்படியும் தொடர்ந்து முன்னணிப் படங்களில் நடித்து வெற்றிப் பட நாயகியாகிவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டு வந்தனர்.

கைமாறும் வாய்ப்புகள்:
ஆனால், அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப் போடுவதைப் போல், நம்பர் நாயகி மீண்டும் டூயட் ஆட ஆரம்பித்திருப்பதால், அவர்களின் பட வாய்ப்புகள் எல்லாமே அவருக்குச் சென்று விடுகிறது. இதனால் அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீசாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

பலத்த போட்டி:
ஒரே நேரத்தில் தனி நாயகியாகவும், முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் என இரண்டு பக்கங்களில் இருந்தும் தங்களுக்கு பலத்த போட்டி அளிப்பதால், நம்பர் நடிகை மீது செம கடுப்பில் இருக்கின்றனர் மற்ற நடிகைகள். ஏன் இப்படி மீண்டும் டூயட் பாட ஆரம்பித்து எங்கள் பிழைப்பைக் கெடுக்கிறார் என பார்ப்பவர்களிடம் எல்லாம் புலம்புகின்றனராம்.


Click it and Unblock the Notifications











