கழட்டி விட்ட டாப் நடிகர்.. பழிவாங்கத் துடிக்கும் நம்பர் நடிகை.. மீண்டும் அவருடன் ஜோடி சேர முடிவாம்!

By Staff

சென்னை: நம்பர் நடிகை எப்படியாவது அந்த டாப் நடிகருடன் ஜோடிப் போட்டு நடித்து கோலிவுட்டில் மீண்டும் தனது முதல் இடத்தை பிடிக்க நினைத்த நிலையில், அதற்கு பெரிய நோவாக சொல்லி விட்டதோடு இல்லாமல் நடிகையின் கணவரையும் கிளம்புங்க தம்பி என விரட்டி விட்டதாக தகவல்கள் வெளியாகின.

எப்படியாவது டாப் நடிகர் செய்த செயலுக்கு அவர் வருந்தியே தீர வேண்டும் என்றும் அவர் படத்தில் நடிக்க வில்லை என்றால் என்ன அந்த பிரபல நடிகருக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகருக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன் நடிகை செயல்பட்டு வருவதாக பரபரப்பு பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.

Number actress tries to grab Star actor movie to punish Top actor?

ஒரு முடிவை எடுத்தால் எப்படியாவது வெற்றி காண போராடும் அந்த நடிகை இந்த முறையும் அதற்கான வேலைகளை தீயாக செய்து வருவதாக கூறுகின்றனர்.

திட்டத்தை கெடுத்த டாப் நடிகர்:தனக்கும் தனது கணவருக்கும் மிகப்பெரிய பட வாய்ப்பாக டாப் நடிகரின் படம் அமைந்து விடும் என ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை அடிக்க நம்பர் நடிகை குறி பார்த்துக் கொண்டிருக்க, ரெண்டுமே வேண்டாம் என டாப் கியரில் ரூட்டையே மாற்றிவிட்டு கிளம்பி விட்டார் டாப் நடிகர். இதனால், நடிகையின் திட்டம் முற்றிலுமாக கெட்டுப் போய் விட்டதால் ரொம்பவே அப்செட் ஆனார்.

சோலோ ஹீரோயினாக நடிக்கும் படங்களும் சொதப்பி வரும் நிலையில், திருமணத்துக்கு பின்னர் எந்தவொரு முன்னணி நடிகர்களும் நடிகையுடன் பழையபடி சகஜமாக ஜோடி போட்டு நடிப்பதை விரும்பாமல் விலகிச் செல்வது நடிகைக்கு தொழில் ரீதியாகவே ரொம்பவே கஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர்.

Number actress tries to grab Star actor movie to punish Top actor?

பதிலடி கொடுக்கணும்:நடிகரின் செயலால் நடிகைக்கு ஏற்பட்ட பாதிப்பை விட நடிகையின் கணவருக்கு ஏற்பட்ட அவமானம் தான் அதிகம் என்பதால், அதற்கு எப்படியாவது பழி வாங்கி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் நடிகை ரொம்பவே உறுதியாக இருப்பதாக கூறுகின்றனர்.

இந்நிலையில், அதற்கு ஏற்ற வகையில் ஒரு முன்னணி நடிகருடன் இணைந்து மீண்டும் தனது முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்றும் கணவருக்கும் சூப்பர் ஹிட் கொடுத்து சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என நடிகை முனைப்பு காட்டி வருவதாக கூறுகின்றனர்.

உச்ச நடிகருக்கு ஜோடி:ஏற்கனவே பல முறை உச்ச நடிகருடன் ஜோடிப் போட்டு நடித்த நம்பர் நடிகை மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க திட்டம் போட்டு இருப்பதாக சூடான தகவல்கள் கசிந்துள்ளன. அந்த ஹிட் இயக்குநர் இயக்கத்தில் உருவாக உள்ள உச்ச நடிகரின் படத்தில் எப்படியாவது ஜோடி சேர வேண்டும் என பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து விட்டாரம் நம்பர் நடிகை.

Number actress tries to grab Star actor movie to punish Top actor?

மீண்டும் நம்பர் நடிகை தன்னுடன் ஜோடி சேர விருப்பம் தெரிவித்த நிலையில், உச்ச நடிகரும் அதற்கு பச்சைக் கொடி காட்டி உள்ளார் என்றும் சமீபத்தில் நடந்த நடிகையின் நிகழ்ச்சியில் கூட உச்ச நடிகர் பங்கேற்றதன் பின்னணியில் இந்த டீலிங் தான் ஓடிக் கொண்டிருப்பதாக கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சுக்கள் அனல் பறக்கின்றன. அது மட்டும் நடந்து விட்டால் மீண்டும் சக்சஸ் ஹீரோயினாக வலம் வருவார் என்றும் ஆன்மிக சுற்றுலா செய்து வருவதற்கு எல்லாம் அந்த நடிகரின் அபிப்பிராயத்தை பிடிக்கத்தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X