Don't Miss!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க பணத்தை கையாளுவதில் கில்லாடிகளாம்... இவங்களுக்கு எப்பவும் பணக்கஷ்டம் வராதாம்...!
- News
ஹிண்டன்பர்க் அறிக்கையா? அதானி பங்குகள் சரிவா? கருத்து தெரிவிக்க முடியாது.. மத்திய அரசு மறுப்பு
- Technology
பச்சையாக டீஸ் செய்து காட்டிய OnePlus.! ஆஹா..ஓஹோனு ஒன்னுமில்லை.. ஆனா ஹைப் எகுறுது.!
- Sports
"அந்த ரிஸ்க்கை மட்டும் எடுக்கல.. இல்லைனா.." இந்தியாவின் வரலாற்று வெற்றி.. ஹர்திக் பாண்ட்யா விளக்கம்!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்ன நம்ம நிலைமை இப்படி ஆகிடுச்சே.. புதுப் படத்தை யாருமே சீண்டல.. விரக்தியில் நம்பர் நடிகை!
சென்னை: நம்பர் நடிகை நடிப்பில் உருவாகி உள்ள அந்த புதிய படத்தை ஒருத்தருமே சீண்டவில்லை என ரொம்பவே அப்செட் ஆகி உள்ளார் என பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஏகப்பட்ட சிக்கலில் சிக்கினார் நம்பர் நடிகை. அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன.
இந்நிலையில், அடுத்த படத்திற்கும் அதே நிலைமை தானா? என்கிற பயம் அவருக்கு தற்போது அதிகமாகவே ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
அசீம்
பெண்களிடம்
தரக்குறைவாக
பேசுவார்..உண்மையை
உடைத்த
சக
நடிகை!

அந்த பட்டம் எதற்கு
நம்பர் நடிகை அவுட் டேட்டட் ஆகி விட்ட நிலையில், இன்னும் அந்த பெரிய பட்டத்தை ஏன் தனது படங்களில் போட்டு பயன்படுத்தி வருகிறார் என்றும் அந்த பெயருக்கு ஏற்றவாறு படங்களை ஹிட் ஆக்க தெரியவில்லையே என கோடம்பாக்கம் முழுவதும் கிண்டல் செய்து பேசி வருகின்றனர். சிலர் நடிகையின் காது படவே அப்படியொரு பேச்சை பேசி வருகின்றனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஒண்ணுமே ஓடல
இந்த ஆண்டு நம்பர் நடிகை நடித்து ஒரு படம் கூட ஓடவில்லை. கடந்த ஆண்டும் ஃபிளாப் கொடுத்த நடிகை தொடர்ந்து தோல்வி படங்களாக கொடுத்து வரும் நிலையில், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறுகின்றனர். அவரது தோற்றமும் பார்க்க ரசிகர்களை கவரும் வகையில் இல்லாதது தான் பெரிய மைனஸ் என்கின்றனர்.

கடுப்பான ஓடிடி
இந்த ஆண்டு தான் நடிகைக்கு திருமணம் ஆகிறது. அதை வெளியிட்டு பெரும் பணம் பார்த்து விடலாம் என நினைத்த அந்த ஓடிடி நிறுவனமும் நம்பர் நடிகை திருமணத்தில் செய்த தில்லாலங்கடி வேலை காரணமாக கடும் அப்செட் ஆகி அந்த படத்தையே வெளியிட போவதில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

அடிமேல் அடி
தொடர்ந்து நடிகையை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான பக்கத்து ஸ்டேட் படங்கள் எல்லாம் நடிகைக்கு ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லாத அளவுக்கு ஆகிவிட்ட நிலையில், அடிமேல் அடி அந்த நடிகைக்கு விழுந்து வருகிறது. ஒரேயடியாக ஓய்வெடுத்து விடு என்றும் நெருங்கிய நண்பர்களே சிலர் அட்வைஸ் கூறி வருகிறார்களாம்.

மாறிப்போன தோற்றம்
திடீரென ஒல்லியாகி பார்க்கவே பரிதாப நிலைக்கு நடிகை மாறி நடித்துள்ள அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், ரசிகர்கள் நம்பர் நடிகைக்கு என்ன ஆச்சு திடீரென என ஷாக் ஆகிப் போயுள்ளனர். அதே லுக்குடன் வெளியாக உள்ள புதிய படத்தை பலரும் சீண்டாமல் போனதற்கு காரணமும் அதுதான் என்கின்றனர்.

நடிகை அப்செட்
இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் படம் நிச்சயம் கை கொடுக்கும் என பெரிய நம்பிக்கையில் இருந்த நடிகைக்கு சமீபத்தில் வெளியான டிரைலரை யாருமே பெரிதாக சீண்டாத நிலையில், ரொம்பவே அப்செட் ஆகி உள்ளாராம். படத்திற்கு எந்தவொரு ப்ரமோஷன் கூட பண்ணாமல் விட்டு விட்டால், நம்பர் நடிகையே நடித்தாலும் வெளியே தெரியாது என கோடம்பாக்கத்தில் பெரும் பேச்சு நிலவி வருகிறது.