உச்சகட்ட கோபத்தில் நம்பர் நடிகை.. கணவர் செயலால் கிளம்பிய சர்ச்சை.. வச்சு செய்த பிரபலம்.. என்ன ஆச்சு?
சென்னை: கோலிவுட்டில் இருந்து இரண்டு பெரிய நடிகர்கள் நம்பர் நடிகையையும் அவரது கணவரையும் கட்டம் கட்டி தாக்கி வருவதால் ரொம்பவே கடுப்பில் இருந்து வந்த நடிகை ஒல்லி நடிகரை டைரக்ட்டாக எதிர்க்கவே ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதனால் தற்போது அவரது கணவருக்கும் கணவர் படத்துக்கும் பெரிய சிக்கல் உருவாகியிருப்பதாகவும், நடிகை நடிக்கும் படங்களுக்கும் பல பிரச்சனைகள் உருவாகியிருப்பதாகவும் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
பொட்டி படுக்கையை எல்லாம் மூட்டைக் கட்டிக்கொண்டு வேறு இடத்துக்கு சென்றுவிடலாம் என்றும் நடிகை பிளான் போட்டு வருவதாகவும் பேச்சுக்கள் புகையத் தொடங்கியுள்ளன. ஆனால், கோலிவுட்டில் கைவசம் இருக்கும் சில படங்களை முடித்துக் கொடுக்க வேண்டுமே என்பதற்காக கொஞ்சம் சென்னைக்கு பக்கத்திலேயே இருக்கலாம் என்பதற்காகவே நடிகையின் கணவர் செய்த செயல் தற்போது அவர்களுக்கே சிக்கலாக மாறியுள்ளதாக பிரபலம் விளாசியுள்ளார்.

பேராசை காரணமாக ஏகப்பட்ட செய்யக்கூடாத வேலைகளை நம்பர் நடிகையும் அவரது கணவரும் பார்த்து வருகிறார் என்றும் கணவரின் செயலால் அதிகம் பாதிக்கப்படுவது அவரது மனைவி தான் என்றும் அதிர்ச்சியளிக்கும் பேச்சுக்கள் அடிபட தொடங்கியுள்ளன.
கோபத்தில் நம்பர் நடிகை: தொடர் தோல்விகள் மட்டும் தனது கணவர் படம் முடிவடையாமல் தாமதமாக சில நடிகர்கள் இறங்கி வேலை செய்து வருவதால் தான் நடிகை ரொம்பவே கடுப்பாகி கோபத்தின் உச்சியில் உள்ளார் என்று கூறுகின்றனர். மேலும், அவருக்கு இங்கே இருக்கவே பிடிக்கவில்லை என்றும் வேற இடத்துக்கு ஷிஃப்ட் ஆக பல வேலைகளை பார்த்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.
பிசினஸ் மோசடி: தொழிலில் ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலை பார்த்து வருகிறார் என்றும் வெளிநாடுகளில் பல சொத்துக்களை வாங்கி குவிக்க அவருக்கு காசு வருவதாகவும் மனைவியின் பணத்தில் கணவர் இஷ்டத்துக்கு செலவு செய்துக் கொண்டு இருப்பதாகவும் சரியாக சினிமா வேலையை கவனிக்காததால் நம்பி வந்த நடிகர்கள் எல்லாம் அடுத்த கால்ஷீட் கொடுக்காமல் அலைக்கழித்து வருகின்றனர் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
விளாசிய பிரபலம்: நடிகையின் நெருங்கிய நண்பராக இருந்து வந்த தயாரிப்பாளர் ஒருவரிடமே அவரது கணவர் கைவரிசையை காட்டிய நிலையில், நடிகைக்கே போன் செய்து கணவர் குறித்து அந்த பிரபலம் புகார் அளித்துள்ளாராம். நடிகையை தவறான பாதைக்கு கொண்டு செல்வதே அவர் தான் என்றும் சீக்கிரமாகவே விழித்துக் கொண்டால் தான் உங்கள் கரியருக்கு நல்லது என்று அட்வைஸ் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











