சோகத்தில் நம்பர் நடிகை.. கடைசியில் இந்தளவுக்கு இறங்கிட்டாரே என புலம்பிய பிரபலம்?

By Staff

சென்னை: வெளியே சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் உண்மையாக நம்பர் நடிகையும் அவரது கணவரும் சந்தோஷமாகவே இல்லை என்று பிரபலம் ஒருவர் பகீர் கிளப்பியுள்ளார். அதற்கு காரணமே இத்தனை ஆண்டுகள் கோலிவுட்டில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து பல நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் ஹிட் கொடுத்தவரை தற்போது ஒரு சில நடிகர்களின் அழுத்தம் காரணமாக ஒதுக்கி வைக்க ஆரம்பித்தது தானாம்.

ஒல்லி நடிகருக்கும் நம்பர் நடிகைக்கும் இடையே வெடித்த மோதல் தான் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் என்றும் தனது கணவரின் படத்தை முடிக்க விடாமல் பல சதி வேலைகள் நடப்பதாகவும் தன்னுடைய படங்களுக்கும் பைனான்ஸ் கிடைக்காமல் சிக்கல்களை மறைமுகமாக உருவாக்கி வருகின்றனர் என நடிகை ரொம்பவே அப்செட் ஆகியுள்ளாராம்.

gossip kollywood actress gossip

சொந்த தயாரிப்பில் படத்தை பண்ணினாலும் சொந்த காசை போடாமல் சில பைனான்ஸியர்களை நம்பித்தான் நடிகை உஷாராக காய் நகர்த்தி வந்தாராம். ஆனால், அதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகத்தான் அப்படியே தற்போது அமைதி காத்து வருவதாக கூறுகின்றனர். மேலும், திடீரென அப்படியொரு முடிவை நடிகை எடுக்கவும் பணம் தான் பிரச்சனை என்றும் கூறுகின்றனர்.

குத்தாட்டம் போட ரெடி: ஒரு படத்தில் மட்டுமின்றி மேலும், சில மற்ற மொழி படங்களில் குத்தாட்டம் போட திடீரென க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளாராம் அந்த நம்பர் நடிகை. கோலிவுட் படங்களிலேயே நடனமாடாமல் நடந்துக் கொண்டே பாடல்களில் ஓபி அடித்து வந்த நம்பர் நடிகையா இப்படி மாறிவிட்டார் என்றும் இதற்கு பின்னால் இப்படியொரு காரணம் இருக்கா என நடிகைக்கு ரொம்பவே வேண்டப்பட்ட பிரபலம் ஒருவர் அவருக்கு இருக்கும் கஷ்டங்கள் மற்றும் கடன்கள் குறித்து பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செம சேஃப்டி: நடிகை தனது சொத்துக்களை செம சேஃப்டியாக ஏகப்பட்ட பிராப்பர்டிகளை வாங்கிப் போட்டு வைத்துள்ளாராம். ஆனால், சமீப காலமாக பிசினஸில் அவர் முதலீடு செய்தது தான் அவரை கொஞ்சம் கடனில் தள்ளியிருப்பதாக கூறுகின்றனர். தயாரிப்பு நிறுவனத்துக்கு வரவேண்டிய பைனான்ஸ் திடீரென நிறுத்தப்பட்டதால் தான் கணவரின் படம் முழுமையடையாமல் அப்படியே பாதியில் இருப்பதாகவும் அந்த பிரபலம் கூறியுள்ளார்.

சோகத்தில் நம்பர் நடிகை: ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த தன்னை கோலிவுட் திடீரென ஒரு சில நடிகர்களின் தலையீடு காரணமாக தள்ளி வைத்து விட்டார்களே என ரொம்பவே சோகத்தில் இருக்கிறாராம். மற்றமொழி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி எந்த சான்ஸ் இருந்தாலும் பெற்றுவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளார் என்றும் அந்த பிரபலம் கூறியுள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X