பிரம்மாண்ட படத்தால் மூன்றெழுத்து நடிகைக்கு ஏறிய மவுசு.. கடும் அப்செட்டில் அந்த நம்பர் நடிகை!

By Staff

சென்னை: பிரம்மாண்ட படம், மீண்டும் மாஸ் நடிகர் படம் என ரவுண்டு கட்டி வெயிட்டு காட்டி வருகிறார் அந்த மூன்றெழுத்து நடிகை.

தொடர்ந்து தக்க வைத்து வந்த தனது இடத்தை திடீரென அதிரடியாக தகர்த்து விட்டாரே அந்த முன்னாள் நம்பர் ஒன் நடிகை என அப்செட் ஆகி உள்ளாராம் நம்பர் நடிகை.

தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாத நிலையில், நடிகையின் மார்க்கெட் கோலிவுட்டில் டோட்டல் டேமேஜ் ஆகி உள்ளதாம்.

மீண்டும் முதலிடம்

மீண்டும் முதலிடம்

கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த அந்த மூன்றெழுத்து நடிகை திடீரென பழைய பீஸாக மாற புதிய நடிகைகள் பக்கம் முன்னணி நடிகர்கள் அப்படியே தாவினர். ஆனால், அந்த காதல் படத்தில் நடித்ததன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் தனது முதலிடத்தை நோக்கி அடியெடுத்து வைத்து வருகிறார் அந்த அழகான மூன்றெழுத்து நடிகை.

பிரம்மாண்ட படம்

பிரம்மாண்ட படம்

ஏற்கனவே அந்த இயக்குநர் படத்தில் நடித்த புண்ணியத்தால், அவார்டு நடிகை வேண்டாம் என உதறிய ரோலை கப்புன்னு பிடித்துக் கொண்ட நடிகைக்கு தற்போது எங்கே போனாலும் ராஜ உபச்சார வரவேற்பு தான் வழங்கப்பட்டு வருகிறதாம். வரலாற்றில் முக்கியமான கதாபாத்திரத்தில் கச்சிதமாக அவர் நடித்துள்ள நிலையில், மரியாதையும் கூடி உள்ளதாக கூறுகின்றனர்.

பெரிய எதிர்பார்ப்பு

பெரிய எதிர்பார்ப்பு

இந்த படத்தின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ள நடிகை பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பதிவு செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தால் தனது மார்க்கெட் எங்கேயோ போய் விடும் என்பதால் அந்த படத்திற்கான புரமோஷன்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். பெரிய நடிகையுடன் ஜோடி போட்டு நடித்தாலும், படத்தில் பல இளம் ஹீரோயின்கள் இருந்தாலும், தனது கதாபாத்திரம் தான் வெயிட்டான கதாபாத்திரம் என்பதை நன்கு உணர்ந்தே அவர் தேர்ந்துள்ளார் எனக் கூறுகின்றனர்.

மாஸ் நடிகர் படத்திலும்

மாஸ் நடிகர் படத்திலும்

இந்த படத்தில் நடித்த அதிர்ஷ்டம் அடுத்ததாக மாஸ் நடிகர் படத்திலும் நடிக்க அந்த நடிகைக்கே வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முடியாத நிலை உருவாகி விட்டதே என நம்பர் நடிகை ரொம்பவே புலம்பி வருகிறாராம்.

நம்பர் நடிகை அப்செட்

நம்பர் நடிகை அப்செட்

பாலிவுட்டில் பெரிய நடிகர் படத்தில் நடித்து வந்தாலும், உள்ளூரில் ஓடிடி நடிகை ஆகிவிட்டோமே என்கிற கவலை நம்பர் நடிகையை ஒரு பக்கம் வாட்டி வரத்தான் செய்கிறதாம். டாப் ஹீரோக்களுடன் மீண்டும் பழையபடி நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்றும், முன்னாள் நடிகை அசால்ட்டாக நம்மோட இடத்தை பிடித்து விட்டாரே என்றும் ஃபீல் பண்ணி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X