Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கடைசி நேரத்தில் கல்யாணம் நடக்கும் இடம் மாற இத்தனை காரணங்களா? நம்பர் நடிகை நினைச்சது நடக்கலையே!
சென்னை: நம்பர் நடிகையின் திருமணத்தை தான் ஒட்டுமொத்த திரையுலகமும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இந்நிலையில், அந்த புகழ்பெற்ற இந்துக் கோயிலில் அவரது திருமணம் நடைபெறாமல் போனதற்கு ஏகப்பட்ட காரணங்கள் சொல்லப்படுகின்றன.
நம்பர் நடிகையும் அவரது காதலரும் போட்டு வைத்த பலே திட்டங்கள் எல்லாம் கடைசி நேரத்தில் வீணாக போய் விட்டதே என புலம்பி வருகின்றனராம்.
இயக்குநருடன் நெருக்கம்.. பாலிவுட் ஆசையால் எல்லை மீறிய நடிகை !
ஒருவழியாக திருமணம்
ஏற்கனவே இருவரை காதலித்து திருமணம் வரை சென்று திரும்பிய அந்த நம்பர் நடிகை கடைசியாக அந்த ரவுடி இயக்குநருடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து தேதியையும் குறித்து விட்டார். பிரபல கோயில் ஒன்றில் இருவரது திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் ஏற்பட்ட திடீர் மாற்றம் பல கேள்விகளையும், யூகங்களையும் கிளப்பி உள்ளன.
தடுத்த அம்மா
காதலரின் விருப்பத்தின் பேரில் இந்து பெண்ணாகவே மாறிவிட்ட நம்பர் நடிகை பல இந்துக் கோயில்களுக்கும் காதலருடன் சென்று வந்த புகைப்படங்களை எல்லாம் வெளியிட்டு வந்தார். இந்நிலையில், அந்த பிரபல கோயிலில் திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்து ஏகப்பட்ட வேலைகளை செய்து வந்த நம்பர் நடிகைக்கு கடைசி நேரத்தில் அவரது அம்மா அந்த கோயிலில் வேண்டாம் என கட்டையைப் போட்டது தான் இந்த திடீர் இடமாற்றத்துக்கு காரணம் என சில தகவல்கள் கசிந்துள்ளன.
அனுமதி மறுப்பு
இப்படியொரு கிசுகிசு ஒரு பக்கம் போக, இன்னொரு புறம் நம்பர் நடிகையின் கல்யாணத்திற்கு கடைசி நேரத்தில் கோயில் நிர்வாகமே பல காரணங்களை மனதில் கொண்டு மறுத்து விட்டதாகவும் சில தகவல்களை கசியவிட்டு வருகின்றனர். கோயிலில் திருமணம் செய்ய வேண்டும் என வைத்த வேண்டுதல் கடைசி நேரத்தில் நடைபெறாமல் போய் விட்டதே என்கிற வருத்தமும் காதலருக்கு இருக்கிறதாம்.
கூட்ட நெரிசல்
ஆனால், அதெல்லாம் காரணம் இல்லை என்றும் கோடை விடுமுறை என்பதால் கூட்ட நெரிசல் அந்த பெரிய கோயிலில் அலைமோதி வருவது தான் கடைசி நேரத்தில் திருமண இடத்தை மாற்ற காரணம் என்பது தான் உண்மையான காரணம் என சில நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
பரிகாரம்
திருமணத்தை முடித்த பிறகு கணவனும் மனைவியுமாக அந்த கோயிலுக்குச் சென்று உரிய பரிகாரத்தை முடித்துக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றனர். மேலும், ஹனிமூனுக்கு வெளிநாட்டுக்கு செல்லவும் இருவரும் திட்டம் போட்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.