நியூமராலஜியில் அதிக ஆர்வம்.. மீண்டும் பெயரை மாற்றப் போகிறாராம் நம்பர் நடிகை.. இதுதான் காரணமா?

By Staff

சென்னை: நம்பர் நடிகை சினிமாவுக்கு அறிமுகம் ஆகும் போதே நியூமராலஜி படி தனது பெயரை மாற்றித்தான் இத்தனை ஆண்டுகளாக முதலிடத்தில் கலக்கி வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தொடர்ந்து தனது வாழ்வில் கஷ்டங்கள் வந்து கொண்டிருக்க ஜோசியரை சென்று பார்த்த நம்பர் நடிகைக்கு மீண்டும் ஒருமுறை பெயரை மாற்ற வேண்டும் என ஜோசியர் சொல்லிவிட்டாராம்.

மற்ற ஹீரோயின்கள் பொறாமைப்படும் அளவுக்கு பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து மிரட்டி வரும் நம்பர் நடிகைக்கு சமீப காலமாக இறங்குமுகமாக உள்ளது மிகவும் கவலையை அளித்து வருகிறதாம்.

Number actress wish to change her name again with Numerology advice

நடிக்கும் படங்கள் மட்டுமின்றி தொழில் ரீதியாகவும் தொடர் நஷ்டங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், அதனை சரி செய்ய ஏகப்பட்ட பரிகாரங்களை செய்து வருகிறாராம்.

திருமணத்திற்கு பிறகு எல்லாமே சரிவு: நம்பர் நடிகை டாப் நடிகையாக கலக்கி வந்த நிலையில், பிரம்மாண்டமாக காதலரை கரம் பிடித்த நிலையில், யார் கண் பட்டதோ என்னவோ எந்த பேச்சுலரின் சாபமோ தெரியவில்லை தொடர்ந்து நடிகை நடிக்கும் படங்கள் மற்றும் நடிகரின் கணவர் தொடங்கும் படங்கள் என அனைத்துமே சரிவை சந்தித்து வருகிறதாம்.

Number actress wish to change her name again with Numerology advice

இதனால், கணவன் மற்றும் மனைவி இருவருமே கவலையில் ஆழ்ந்துள்ள நிலையில், அதனை களைய என்ன செய்ய வேண்டும் என சமீபத்தில் கேரளாவுக்கு சென்று ஜோசியர் ஒருவரை சந்தித்து வந்திருக்கிறாராம் நம்பர் நடிகை.

பரிகாரங்கள்: கண் திருஷ்டி அதிகமாகி விட்ட நிலையில், அதனை எல்லாம் சரி செய்ய சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என கூறிய நிலையில், கோயில் கோயிலாக சென்று பரிகாரங்களை கணவருடன் செய்து வருகிறாராம் நம்பர் நடிகை.

சீக்கிரமே விடிவு காலம் பிறந்து விடும் என்றும் இந்த நிலை கடந்து போகும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து வரும் நம்பர் நடிகைக்கு நியூமராலஜி விஷயத்திலும் பார்வை சென்று இருப்பதாக கூறுகின்றனர்.

நியூமராலஜியில் ஆர்வம்: தனது பெயரை சினிமாவுக்கு வரும் போதே நியூமராலஜி படி மாற்றிக் கொண்ட நம்பர் நடிகை தனது ஆஸ்த்தான நியூமராலஜி ஜோசியர் சொன்னதை கேட்டு பெயருக்கு முன்பாக அந்த பட்டத்தையும் போட்டுக் கொண்ட பின்னர் தான் பல பாக்ஸ் ஆபிஸ் படங்களில் கமிட் ஆனார் என்றும் கூறுகின்றனர்.

மேலும், தனது காதலர் பெயரிலும் ஸ்பெல்லிங் மாற்றங்கள் செய்தும் தனது குழந்தைகளுக்கும் நியூமராலஜி முறைப்படியே கணவர் ஆசையாக வைத்த தமிழ் பெயர்களை பெரிய பெயராகவே மாற்றி உள்ளார் என்கின்றனர்.

பெயரை மாற்றப்போகிறார்: இந்நிலையில், தற்போது அந்த ஜோசியர் அறிவுரைப்படி தனது பெயரையே நம்பர் நடிகை மாற்றப்போகிறார் என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. பெயரை என்றால் இப்போதைக்கு வழங்கப்பட்டு வரும் அந்த பெயரை மாற்றப் போவது இல்லையாம். அதில், சில ஸ்பெல்லிங் கரெக்‌ஷன் செய்தால் பழையபடி அதிர்ஷ்ட தேவதை வீட்டு வாசலை தேடி வருவார் என சொல்லி உள்ள நிலையில், அதற்கான ஆலோசனையில் நடிகை ஈடுபட்டு வருவதாகவும், எக்ஸ்ட்ரா ஒரு எழுத்தை சேர்த்தால் சரியாக இருக்குமா? அல்லது ஒரு எழுத்தை இடையே குறைத்தால் சரியாக இருக்குமா? என சரியாக கணித்து தரும்படி நம்பர் நடிகை கோரிக்கை விடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X