பேசாம காதலரை ஹீரோவாக்கிடுங்க… நடிகைக்கு பறக்கும் அட்வைஸ்கள்
டிவி ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே வாங்கி வைத்திருக்கிறார் நம்பர் நடிகையின் கரண்ட் காதலர். ரவுடி படம் ரிலீஸ் ஆகி ஒரு வருடம் ஆகப்போகிறது. ஹீரோ அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிடுகிறார். ஆனால் காதலர் படத்தை பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறார்.

நடிகைக்கும் வாய்ப்புகள் குறைந்துகொண்டே வருகிறது. தல நடிகரிடம் கால்ஷீட் கேட்டதற்கு அவரும் கைவிரித்துவிட்டார். எனவே இருவருக்குமே வாய்ப்பில்லாமல் போகுமோ என்ற அச்சத்துக்கு வந்திருக்கிறார் நடிகை.
பேசாமல் உங்க காதலரை ஹீரோவாப் போட்டு படம் எடுங்க என்ற ரீதியில் அட்வைஸ்கள் பறக்கின்றன. நடிகையோ அவ்ளோ பெரிய ரிஸ்க் எடுக்கணுமா? என்று யோசிக்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications