சிஸ்டரா நடிக்கிறோமே.. இது பின்னாடி பாதிக்குமா.. குழப்பத்தில் நம்பர் நடிகை!

சென்னை: வரலாற்று படத்தில் நடித்து வரும் அந்த நம்பர் நடிகைக்கு தற்போது லேசான பயம் தொற்றிக் கொண்டுள்ளதாம்.

ஏற்கனவே ஜோடி போட்டு நடித்த இரண்டு நடிகர்களுக்கு தற்போது சிஸ்டரா நடிக்கிறோமே இது பின்னாடி தனது கேரியரை பாதிக்குமா என யோசித்து வருகிறாராம்.

இதனால், தான் மற்ற நடிகைகள் அந்த கதாபாத்திரத்தை ஏற்க தயங்கினார்களோ, ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டோமே என்று தற்போது அந்த நம்பர் நடிகை குழம்பி வருகிறாராம்.

கம்பேக்

கம்பேக்

நம்பர் நடிகை நடிப்பில் கடைசியாக வெளியான அந்த ஃபர்ஸ்ட் லவ் படம் மிகப்பெரிய அளவுக்கு அவருக்கான வரவேற்பை கொடுத்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த நடிகைக்கு மீண்டும் கோலிவுட்டில் சரியான கம்பேக் படமாகவும் அந்த படம் அமைந்தது.

கனவு பலித்தது

கனவு பலித்தது

அதுமட்டுமின்றி, அடுத்தது நீண்ட நாள் கனவான உச்ச நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் அந்த நம்பர் நடிகைக்கு கிடைத்தது. சின்ன ரோலாக இருந்தாலும், கனவு பலித்த சந்தோஷத்தில் அம்மணி துள்ளி குதித்தார்.

ஆக்‌ஷன் அவதாரம்

ஆக்‌ஷன் அவதாரம்

கிடைத்த சான்ஸை இந்த முறை விட்டு விடக் கூடாது என தொடர்ந்து கிடைக்கும் படங்களில் எல்லாம் கமீட் ஆகி வருகிறார் அந்த நம்பர் நடிகை. சாதுவாக நடித்து ஹிட் கொடுத்து வரும் நிலையில், ஆக்‌ஷன் அவதாரமும் எடுத்து பார்க்கலாம் என தற்போது தைரியமாக சில ஆக்‌ஷன் படங்களிலும் நடித்து வருகிறார்.

பெரிய வாய்ப்பு

பெரிய வாய்ப்பு

பல முன்னணி ஹீரோயின்கள் அந்த ரோலில் நடிக்க தயக்கம் காட்டிய நிலையில், அந்த பெரிய வாய்ப்பு நம்பர் நடிகையை தேடி வந்தது. அவரும் யோசிக்காமல் கிடைத்த வாய்ப்பு நழுவ விடக்கூடாது என ஓகே சொல்லிவிட்டார்.

அப்போ ஜோடி.. இப்போ சிஸ்டர்

அப்போ ஜோடி.. இப்போ சிஸ்டர்

வரலாற்று படத்தில் நம்பர் நடிகை முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதைப்படி அவருக்கு இரு சகோதரர்கள். ஆனால், அந்த இரண்டு பேரிடமும் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ள அந்த நடிகை தற்போது சிஸ்டராக நடித்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்றுக் கொள்வார்களா?

ஏற்றுக் கொள்வார்களா?

ஜோடியாக நடித்து பின்னர் சகோதரியாக நடித்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற எழுதப்படாத ஐதீகம் ஒன்று நிலவி வருகிறது. அதே போல, மார்க்கெட்டும் போய்விடும் சூழலும் உருவாகும் என்ற பேச்சுக்களும் அடிபட்டு வருகிறது.

ஒரே குழப்பம்

ஒரே குழப்பம்

இதனால், ஒரே குழப்பத்தில் தற்போது அந்த நம்பர் நடிகை தலையை பிய்த்துக் கொண்டு வருகிறாராம். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மார்க்கெட் வருகிறது. பெரிய படம் என்பதால், எதையும் யோசிக்காமல் ஓகே சொல்லிவிட்டேன். இந்த காரணத்திற்காகத் தான் மற்ற முன்னணி நடிகைகள் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தார்களா? என்ற கேள்வியும் தற்போது அவர் மனதை வாட்டி வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X