திடீரென டாப் நடிகரை நம்பர் ஒன்னாக மாற்றத் துடிக்கும் பிரபலம்.. எல்லாத்துக்கும் காரணம் அதுதானா?

By Staff

சென்னை: சிவனேன்னு எந்தவொரு நம்பர் கேமிலும் தலையிட்டுக் கொள்ளாமல் தனக்கு பிடித்ததை செய்து வந்த அந்த டாப் நடிகரை வைத்து திடீரென நம்பர் ஒன் கேம் போட்டி படு வேகமாக நடக்க காரணமே அந்த பிரபலம் தான் என்கின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு கோலிவுட்டில் திடீரென மிகப்பெரிய நம்பர் கேம் கிளம்பி உள்ளது. நடிகர்களின் மார்க்கெட் மற்றும் சம்பளத்தை பல மடங்காக உயர்த்த இந்த விளையாட்டு ஆரம்பித்துள்ளது என்கின்றனர்.

அந்த விஷயத்தில் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்து வந்த அந்த நடிகைரையும் தற்போது ஆட்டத்தில் கொண்டு வந்ததற்கு பின்னணியில் மிகப்பெரிய காரணம் இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

முதலிடத்தில் மாஸ் நடிகர்

முதலிடத்தில் மாஸ் நடிகர்

கோலிவுட்டை பொறுத்தவரையில் இப்போதைக்கு முன்னணி நடிகர்கள் லிஸ்ட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது மாஸ் நடிகர் தான் என்கின்றனர். அவருக்கான மார்க்கெட்டும் வசூலும் தான் அதனை உறுதி செய்கின்றது எனக் கூறுகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற போட்டியும் அதனை நூறு சதவீதம் உறுதி செய்து விட்டது.

நம்பர் 2

நம்பர் 2

கடந்த சில ஆண்டுகளாக இந்த கம்பேரிசன் தேவையில்லை என்றும் அதன் காரணமாக அசிங்கப்படாமல் தனது ரசிகர்களை கட்டுக்கோப்பாக கொண்டு சென்ற அந்த நடிகரை வான்டட்டாக வந்து வண்டியில் ஏற்றி நீங்க நம்பர் 2 தான் என சொல்ல வைக்கும் அளவுக்கு பெரிய சம்பவத்தை அந்த தயாரிப்பு நிறுவனம் செய்து விட்டது.

ஈகோ கிளாஷ்

ஈகோ கிளாஷ்

இரு நடிகர்களும் மோதல் இல்லாமல் சென்று கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் ஈகோ கிளாஷை அந்த பிரபலம் பற்ற வைத்திருக்கிறார் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மாஸ் நடிகரை கீழே இறக்கி விட்டு நம்பர் ஒன் இடத்தில் டாப் நடிகரை கொண்டு வைக்க அதனால் தான் சமீப காலமாக இயக்குநரை மாற்றுவது உள்ளிட்ட பல வேலைகள் நடைபெறுவதாக கூறுகின்றனர்.

மாஸ் நடிகருக்கு செக்

மாஸ் நடிகருக்கு செக்

ஏற்கனவே கடந்த ஆண்டு தங்கள் தயாரிப்பில் வெளியான பிரம்மாண்ட படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், இந்த ஆண்டு அந்த படத்தை மாஸ் நடிகரின் படத்துடன் நேருக்கு நேர் மோத விடவும் தயாரிப்பு நிறுவனம் பெரிய பிளான்களை செய்து வருவதாகவும் டாப் நடிகரின் படம் போட்டிக்கு ரெடியாகாத நிலையில், இப்படியொரு ஏற்பாட்டை அந்த நிறுவனம் செய்து வருவதாக கூறுகின்றனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

மாஸ் நடிகரை வைத்து ஆரம்பத்தில் ஒரு சில படங்களை தயாரித்த அந்த நிறுவனம் தொடர்ந்து நடிகரை வைத்து பெரிய படங்களை உருவாக்க நினைத்துள்ளது. அந்த பிரம்மாண்ட படத்திலும் நடிகரை கொண்டு வர பல கட்ட முயற்சிகள் நடைபெற்ற நிலையிலும், தயாரிப்பு நிறுவனம் செய்த சில தவறுகளால் நடிகர் அதற்கு ஒப்புக் கொள்ளவே இல்லை.

முடியவே முடியாது

முடியவே முடியாது

அதிக சம்பளம் கொடுக்கிறோம் எங்க பேனருக்கு படம் பண்ணுங்க என தயாரிப்பு நிறுவனம் சொல்லியும், நடிகர் முடியவே முடியாது என சொன்னதால் தான் அவருக்கு போட்டியான நடிகரை தேர்வு செய்து அதிக சம்பளம் கொடுக்கிறோம் என நடிகருக்கு எதிரான போட்டியில் அதி தீவிரமாக களமிறக்கி தங்கள் பழி வாங்கும் படலத்தை நடத்தி வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. எவ்வளவு முயற்சி செய்தாலும் தனது இடத்தை யாராலும் பறிக்க முடியாது என்கிற நம்பிக்கையில் நடிகர் இருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X