காதலில் விழுந்த ஒல்லி நடிகரின் மனைவி.. முட்டுக்கட்டை போட்ட அம்மா.. ஆனால், 2வது திருமணம் கன்பார்ம்!

By Staff

சென்னை: இன்றைய கால இளசுகளுக்கு திருமண வாழ்க்கை என்ன என்பது தெரியாததால் எதற்கு எடுத்தாலும், விவாகரத்து என்று நீதிமன்றங்களின் படிகளை நாடி செல்கிறார்கள். ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அந்த காதல் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே அலுத்துப்போய், பிரிந்து விடுகின்றனர். அப்படி ஆசைப்பட்டு காதலித்த பிரபலம் ஒருவரின் மகள், ஒல்லி நடிகரை திருமணம் செய்து கொண்டார்.ஆனால், அந்த வாழ்க்கை வெறுத்துப்போக தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சினிமாவில் பிரபலமாக இருக்கும் அந்த ஒல்லி நடிகரின் படம் ஓடுகிறதோ இல்லை, இவர் எந்த நடிகையுடன் சேர்ந்து நடிக்கிறரோ அந்த நடிகைக்கு எல்லாம் விவாகரத்து ஆகிவிடுகிறது. அந்த அளவிற்கு ராசியான நடிகர் என இவரை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்த போதும், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதையடுத்து, அண்மையில் இவர்களுக்கு நீதிமன்றமே விவாகரத்து கொடுத்து விட்டது. இவர்களின் விவாகரத்திற்கு முக்கிய காரணமே, அந்த ஒல்லி நடிகருக்கு தலைக்கு மேல் இருக்கும் கடன் தான் என்றும் சொல்லப்படுகிறது.

gossip kollywood cinema

இரண்டாவது திருமணம்: பூனை பார்த்து புலி சூடு போட்டுக்கொண்ட கதை போல, மாமனாரைப் பார்த்து வீடு கட்டி தற்போது கடனில் சிக்கி வருகிறார் அந்த ஒல்லி நடிகர். இந்த கடன் மகளின் தலையில் விழுந்துவிடப்போகிறது என பயந்து திட்டம்போட்டுத்தான் இந்த விவாகரத்தே நடந்துள்ளது என்று சினிமா வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இப்படி இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க, ஒல்லி நடிகரின் மனைவி விவாகரத்து ஆன கையோடு இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி விட்டதாக சொல்லப்படுகிறது.

முட்டுக்கட்டை போட்ட அம்மா: இதுகுறித்து, பேசி உள்ள பிரபலம் ஒருவர், ஒல்லி நடிகரின் மனைவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லி திருமணத்திற்கு சம்மதம் கேட்டுள்ளார். ஆனால், அம்மாவோ, தோளுக்கு மேல வளர்ந்த மகன் இருக்கும் போது காதலா.. கல்யாணமா என்று திட்டிவிட்டு, ஏற்கனவே காதல் கல்யாணம் செய்து தான் இப்போ தனியா இருக்க, இரண்டாவது திருமணமும் காதல் திருமணம் என்றால் அது செட் ஆகாது. இதனால், அந்த காதல் கதையை விட்டு விட்டு,ஒழுங்க வேலையை பாரு, இல்ல கல்யாணம் தான் வேணும்னா நாங்க பார்க்கிற மாப்பிள்ளை கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லி இருக்கிறார். இதற்கு ஒல்லி நடிகரின் மனைவியும் ஒகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது என்று பேசி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X